நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா ஜோடி தங்களது மகனுக்காக ஒன்றிணைந்து புகைப்படம் எடுத்துள்ளது அவர்களது ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் தனுஷ் மற்றும் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், கடந்த ஜனவரி மாதம் தங்களது திருமணப் பந்தத்தில் இருந்து ஒருமித்த கருத்துடன் விலகுவதாக அறிவித்தனர். இவர்களுக்கு யாத்ரா, லிங்கா ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். இருவரும் பிரிந்து வாழ உள்ளதாக அறிவித்தப் பிறகு, அவரவர் வேலைகளில் கவனம் செலுத்தி வந்த நிலையில், தங்களது முதல் மகன் யாத்ராவிற்காக தற்போது மீண்டும் ஒன்றிணைந்துள்ளனர். மகன் யாத்ராவின் பள்ளி நிகழ்ச்சியில் ஒன்றிணைந்து குடும்பமாக எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
![’மகனுக்காக மீண்டும் ஒன்று சேர்ந்த தனுஷ்-ஐஸ்வர்யா’..! குஷியில் ரசிகர்கள்..! வைரல் புகைப்படம்..!](https://1newsnation.com/wp-content/uploads/2022/08/FavVvpLaAAEPY27.jpg)
யாத்ரா பயிலும் பள்ளியில் விளையாட்டு துறையில், அவர் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அவரை உற்சாகப்படுத்துவதற்காக தனுஷ்-ஐஸ்வர்யா ஆகிய இருவரும் பள்ளிக்கு சென்று ஊக்கப்படுத்தியுள்ளனர். இவர்களுடன் பிரபல பாடகரும், தனுஷின் நெருங்கிய நண்பருமான விஜய் யேசுதாஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படம்தான் தற்போது வைரலாகி வருகிறது.
![’மகனுக்காக மீண்டும் ஒன்று சேர்ந்த தனுஷ்-ஐஸ்வர்யா’..! குஷியில் ரசிகர்கள்..! வைரல் புகைப்படம்..!](https://1newsnation.com/wp-content/uploads/2022/08/WhatsApp-Image-2022-08-22-at-3.40.45-PM.jpeg)
தங்களுடைய திருமண வாழ்க்கை முறிவு எந்த விதத்திலும் பிள்ளைகளை பாதிக்கக் கூடாது என்பதை இந்தப் புகைப்படம் உணர்த்துவதாக நெட்டிசன்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். மேலும் இதுகுறித்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த், தனது ட்விட்டர் பக்கத்தில், எனது முதல் மகன் ஸ்போர்ட்ஸ் கேப்டனாக பொறுப்பேற்றதை கண்டு ரசித்து பெருமைக்கொள்கிறேன் என்று பதிவு செய்துள்ளார். மேலும், மகன்கள் வேகமாக வளர்ந்துவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.