தனுஷ் நடிப்பில் வெளியாகவுள்ள ’நானே வருவேன்’ திரைப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்படவுள்ளது.
தனுஷ் நடித்துவரும் ‘நானே வருவேன்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாகும். மேலும், அவரது சகோதரரும் திரைப்பட இயக்குநருமான செல்வராகவன் இயக்கத்தில் உருவாகி வருவதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. பாலிவுட் நடிகை எல்லி அவ்ராமும் இந்த படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். இப்படத்தை வி கிரியேஷன் சார்பில் கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கிறார. ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். மேலும் இந்த படத்தின் இயக்குநர் செல்வராகவனும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இப்படம் வரும் 29ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் 2. 15 மணி நேரம் ஓடக்கூடிய ‘நானே வருவேன்’ திரைப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் தணிக்கைக் குழு வழங்கியுள்ளது. இதற்கு முன்பு துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன ஆகிய படங்கள் தனுஷ் – செல்வராகவன் கூட்டணியில் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்த நிலையில், தற்போது ’நானே வருவேன்’ படம் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எகிறச் செய்துள்ளது.