மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த 5 படங்கள் இவரின் பெயரையே டேமேஜ் செய்துள்ளது என்றே சொல்லலாம். அவை என்னென்ன படங்கள் என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
யுவா: 2004இல் அபிஷேக் பச்சன் நடிப்பில் உருவான திரைப்படம் தான் யுவா. இதில் அஜய் தேவகன், விவேக் ஓபராய், கரீனா கபூர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அதிலும் ஒரு சாதாரண மாணவன் நாட்டுக்காக சக மாணவர்களை, இணைத்து தேர்தலில் எவ்வாறு ஜெயிக்கின்றான் என்பதை மையமாக வைத்து இப்படமானது அமைந்துள்ளது. ஆனால், இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை பெறவில்லை.
கடல்: 2013இல் இயக்குனர் மணிரத்னம் இயக்கி, தயாரித்துள்ள திரைப்படம் கடல். இதில் கௌதம் கார்த்திக், துளசி நாயர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். நவரச நாயகன் கார்த்தியின் மகன் தான் கௌதம் கார்த்திக். எப்படியாவது இவருக்கு ஹிட் படத்தை கொடுத்து விட வேண்டும் என்று இப்படத்தை இயக்கினார் மணிரத்தினம். ஆனால், இது ஒரு தோல்வி படமாகவே அவருக்கு அமைந்தது.
காற்று வெளியிடை: 2017இல் கார்த்தி மற்றும் அதிதி ராவ் ஹைதாரி நடிப்பில் உருவான திரைப்படம். இதில் கார்த்தி இந்திய விமானப்படை பைலட்டாக வருண் என்னும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் விபத்தின் மூலம் ஏற்படும் காதலை மிக அழகாக காண்பித்துள்ளனர். அதிலும் படத்தில் வரக்கூடிய பாடல்கள் சூப்பர் ஹிட் ஆன நிலையில், இப்படம் தோல்வி படமாகவே அமைந்தது.
கன்னத்தில் முத்தமிட்டால்: 2022இல் மாதவன் மற்றும் சிம்ரன் நடிப்பில் உருவான திரைப்படம் கன்னத்தில் முத்தமிட்டால். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். அதிலும் இலங்கை இனப் பிரச்சனையை மையமாகக் கொண்டு இப்படம் வெளிவந்தது. ஆனால், இந்த படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெறாமல் தோல்வி படமாகவே அமைந்தது.
இருவர்: மோகன்லால் நடிப்பில் உருவான திரைப்படம் இருவர். இதில் இவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராய் நடித்துள்ளார். பிரகாஷ்ராஜ், நாசர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தில் திரைப்பட நடிகராக வேண்டும் என்ற ஒரு இளைஞனின் கனவை மிக அழகாக எடுத்து காண்பித்துள்ளனர். படத்தில் வரும் பாடல்கள் இன்றளவும் ரசிகர்களின் மனம் கவர்ந்ததாகவே இருந்து வருகிறது. ஆனாலும், இப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை என்றே சொல்லலாம்.