fbpx

பொன்னியின் செல்வனில் குந்தவையாக நடித்த த்ரிஷாவுக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா..?

’96’ படத்துக்கு பிறகு த்ரிஷா நடிக்க கமிட் ஆன பிரம்மாண்ட படம் தான் ’பொன்னியின் செல்வன்’. இப்படத்தில் குந்தவை என்கிற கேரக்டரில் நடித்துள்ளார் த்ரிஷா. முதலில் இந்த கேரக்டரில் கீர்த்தி சுரேஷை நடிக்க வைக்க திட்டமிட்டிருந்தார் மணிரத்னம். ஆனால், அவரால் நடிக்க முடியாமல் போனதால், அந்த வாய்ப்பு த்ரிஷாவுக்கு வந்தது. கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட த்ரிஷா, இவரை விட யாராலும் குந்தவையாக நடிக்க முடியாது என சொல்லும் அளவுக்கு மிகவும் நேர்த்தியாக அந்த கேரக்டரில் நடித்திருந்தார்.

பொன்னியின் செல்வன் முதல் பாகத்தில் பிரம்மாண்ட வெற்றிக்கு பின்னர் அதன் 2ஆம் பாகம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில், பொன்னியின் செல்வன் 2 பாகத்திலும் நடிக்க நடிகை த்ரிஷா வாங்கிய சம்பள விவரம் வெளியாகி உள்ளது. அதன்படி முதல் பாகத்திற்காக ரூ.2.5 கோடி. 2-ம் பாகத்திற்காக ரூ.3 கோடி என மொத்தமாக ரூ.5.5 கோடி சம்பளமாக வாங்கினாராம். தற்போது நடிக்கும் இளம் ஹீரோயின்கள் ஒரு படம் ஹிட்டானாலே ரூ.5 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கி வரும் இந்த காலகட்டத்தில் நடிகை த்ரிஷா குந்தவையாக நடிக்க வெறும் ரூ.5.5 கோடி மட்டுமே வாங்கியுள்ளது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

Chella

Next Post

மரண அடி அடித்த ரஹானே!... கொல்கத்தா பந்துவீச்சை துவம்சம் செய்த சிங்கங்கள்!... சிஎஸ்கே அபார வெற்றி!

Mon Apr 24 , 2023
ரஹானேவின் மரண அடி ஆட்டத்தால் கொல்கத்தா அணியை வீழ்த்தி 49 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. ஐபிஎல் 16வது சீசனின் 33வது லீக் போட்டியில் தல தோனி தலைமையிலான சென்னை அணியும், நிதீஷ் ராணா தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில், டாஸ் வென்ற கொல்கத்தா அணி, பவுளிங்கை தேர்வு செய்தது. […]

You May Like