சமீபத்தில் திருமணம் செய்துகொண்ட தயாரிப்பாளர் ரவீந்தர் மற்றும் சீரியல் நடிகை மகாலட்சுமி இருவரும் இளம் காதல் ஜோடியை போலவே ரவுண்ட் அடித்துக் கொண்டிருக்கின்றனர்.
இவர்கள் இருவருக்குமே இது இரண்டாவது திருமணம் என்பதால் முதல் மனைவியை சரியாகப் புரிந்து கொள்ளாத ரவீந்தர் தற்போது மகாலட்சுமிக்கு டெலிவரி பாய் மாதிரி அவர் நடிக்கும் சீரியல்களுக்கு எல்லாம் சாப்பாடு எடுத்துக்கொண்டு போய் வருகிறார்.
ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள்’ என பலரும் இவர்களை கிண்டல் அடித்தது தற்போது உண்மையாக போகிறது. சன் டிவியின் அன்பே வா சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் மகாலட்சுமி இன்னும் ஒரு சில சீரியல்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார்
திருமணமான புதிதில் மகாலட்சுமி சூட்டிங்கிற்கு செல்லும்போது சாப்பாடு கட்டிக் கொண்டு வர சொல்வதை முதலில் ஆசையாசையாய் செய்துவந்த ரவீந்தர் கடுப்பாகி, இப்பொழுது மஹாலட்சுமி சீரியலில் நடிப்பதை நிறுத்த போகிறாராம்.
மேலும் ரவீந்தர் தனது பொண்டாட்டியை சுத்தி வந்ததெல்லாம் போதும் என்று, படங்களை தயாரிக்கும் பணிகளில் தீவிரமாக இறங்கப் போகிறார். இவர் தயாரிப்பில் ஏற்கனவே 2014 ஆம் ஆண்டு வெளியான நலனும் நந்தினியும் அதைத்தொடர்ந்து கல்யாணம், முருங்கக்காய் சிப்ஸ் போன்ற படங்களை தயாரித்திருந்தார்.
அதன் பிறகு தற்போது மீண்டும் தயாரிப்பு பணியில் தீவிரம் காட்ட போகிறார். முதலில் மகாலட்சுமிக்கு ரவீந்தர் நடிப்பதற்கு அனுமதி கொடுத்தார். ஆனால் இப்பொழுது கொஞ்சம் கொஞ்சமாக தன்னுடைய சுயரூபத்தைக் காட்டி வருகிறார்.
இனி மகாலட்சுமியை சீரியலில் நடிக்கக்கூடாது என ரவீந்தர் கண்டிப்பாக சொல்லி ஆப்பு வைக்கப் போகிறார். இதனால் பலரும் இவர்களைக் குறித்து விமர்சிப்பது போல் நடந்து விடுமோ என்றும் ரவீந்திரனின் நடவடிக்கை பார்த்தால் தெரிகிறது.