பிக்பாஸில் கலந்துகொண்டுள்ள போட்டியாளர்கள் பற்றி பல்வேறு தகவல்கள் சமூக வலைத்தலங்களில் வைரலாகி வருகின்றது. பல எதிர்பார்ப்புகளுடன் அனைவரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கும் பிக்பாஸ் 6 விஜய்டிவியில் பிரம்மாண்டமாக ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.
இதனால் ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். அதோடு , பிக்பாஸ் சீசன் 6ல் கலந்து கொள்ளும் போட்டியாளர்களை பற்றி அறிய எதிர்பார்த்து காத்துக்கிடக்கின்றனர்.
அதே போல் கமல்ஹாசன் இந்த சீசனையும் தொகுத்து வழங்குகின்றார். அதற்கான ப்ரோமோக்களையும் ஏற்கனவே வெளியாகியதை பார்த்திருப்போம். இந்த முறை நிகழ்ச்சியில் கொஞ்சம் வித்தியாசமாக எடுக்க முயற்சிகள் செய்திருக்கின்றார்கள். அந்த வகையில் பொது மக்களும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது. இந்த முறை நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் மிக கவமுடன் கையாண்டு தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்.
இந்த நிகர்ச்சியை ஒரே நேரத்தில் டி.வியிலும். ஓடிடியிலும் ஒளிபரப்பாக போகின்றது. தினமும் டிவியில் ஒரு மணி நேரமும் நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கின்றது. கிட்டத்தட்ட போட்டியாளர்கள் இறுதி செய்யப்பட்டுவிட்டனர். மேலும், போட்டியாளர் குறித்த இறுதி பட்டியல் தற்போது சமூக வலைத்தலங்களில் கசிந்து வருகின்றது.
இப்போட்டியில் ஜி.பி. முத்து , அசீம் , அசல்கொலார், ஷிவின் கணேசன் , ராபர்ட் , ஷெரீனா , ராம் ராமசாமி , ஆர்யன் தினேஷ் என்ற ஏ.டி.கே., ஜனனி , அமுதவாணன், வி.ஜே. மஹேஸ்வரி , வி.ஜே. கதிரவன் , ஆயிஷா , தனலட்சுமி , ரக்சிதா, மணிகண்டன், மெட்டி ஒலி அரவிந்த் , விக்ரமன் , குயின்சி மற்றும் நிவாஷினி என பலர் கலந்து கொள்ள இருக்கின்றார்கள். இந்த முறை புது முகங்கள் கலந்து கொண்டு இருக்கின்றனர்.
இளசுகளை கவரும் வகையில் பல இளம் போட்டியாளர்கள் கலந்து கொண்டு இருக்கின்றனர். அந்த வகையில் ஷெரினா என்ற மாடல் கலந்து கொண்டு இருக்கின்றார். கேரளாவில் பிறந்த இவர் பெங்களூருவில் தான் பிறந்து வளர்ந்திருக்கின்றார். இவர் சாய் ராம் மோட்டார்ஸ் என்ற நிறுவனத்தை பெங்களூருல் நடத்தி வருகின்றார். மேலும் யு.வி.ஐ. என்ற ஸ்டூடியோ ஒன்றையும் நடத்தி வருகின்றார்.
இவர் பல அழகி போட்டிகளில் கலந்து கொண்டு பட்டம் வென்று இருக்கின்றார். குறிப்பாக கிராசியா ஃபோர்டு சூப்பர் மாடல் ஆப் இந்தியா வேர்ல்டு என்ற பட்டத்தை வென்று இருக்கின்றார். இவ்வளவு விஷயத்தை சொன்ன அவர் தான் ஒரு நடிகை என்பதையும் சமுத்திரக்கனி படத்தில் கூறவில்லை. சமுத்திரக்கனி மற்றும் தம்பி ராமையா படத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியாகி இருந்த ’ வினோதயா சித்தம் ’ படத்தில் தீபக்கிற்கு மனைவியாக நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.