தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமான ரஜினிகாந்துடன் இந்த புகைப்படத்தில் சிறுவனாக இருப்பவர் ஒரு பிரபலமான நடிகர். அடையாளமே தெரியாமல் எப்படி இருக்காருன்னு பாருங்க…
சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் நடிகர் ரஜினிகாந்த் தற்போது இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் என்ற ஒரு திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இந்த திரைப்படத்திற்கு தற்போது மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருந்து வருகின்றது. இதற்கான படப்படிப்பும் விறுவிறுப்பான நிலையை எட்டியுள்ளது.
தற்போது பிரபலங்களாக இருக்கும் நடிகை நடிகர்கள் என அவருடன் சிறுவயதில் இருக்கும் போது எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றது. இளம் வயதில் சினிமா உலகில் கால்பதித்து கலக்கிக் கொண்டிருக்கும் நடிகர் ஜீவாதான் இது.
2003ல் ஆசை ஆசையாய் என்ற திரைப்படத்தின் மூலம் அனைத்து கல்லூரி பெண்களையும் கவர்ந்தவர் ஜீவா. பின்னர் தித்திக்குதே , ராம் , டிஷ்யூம் , கீர்த்திசக்கரா , அரண் , ஈ , பொறி , கற்றது தமிழ் , சிவா மனசுல சக்தி , கோ போன்ற ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.
வந்தான் வென்றான் , நண்பன் , நீதானே என் பொன் வசந்தம் போன்ற திரைப்படங்களில் நடித்தார். ஹிட் படங்களை கொடுத்து வந்த ஜீவா டேவிட் , முகமூடி , 2020ல் ஜிப்சி என்ற திரைப்படங்களில் நடித்தார். ஆனால் போதிய வரவேற்பு பெறவில்லை. கடந்த 2021-ல் ஜீவா நடிப்பில் வெளியான 83 என்ற திரைப்படம் சிறந்த பெயரை பெற்றுத்தந்தது. இதையடுத்து சுந்தர்.சியின் காஃபி வித் காதல் திரைப்படத்தில் நடித்து அந்த படம் வெளியாக உள்ளது. அடுத்ததாக வரலாறு முக்கியம் என்ற படத்திலும் ஜீவா பிசியாக உள்ளார். அவர் சிறுவயதில் நடிகர் ரஜினிகாந்துடன் எடுத்துக் கொண்ட படம்தான் தற்போது சமூக வலைத்தலங்களில் வைரலாகி வருகின்றது.