தமிழ் சினிமாவில் குறுகிய காலத்திலேயே அசுர வளர்ச்சி கண்ட இயக்குனர் என்றால் அது லோகேஷ் கனகராஜ் தான். மாநகரம் திரைப்படத்தில் தொடங்கிய அவரது பயணம், கைதி, மாஸ்டர், விக்ரம் என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்தார். தற்போது லோகேஷ் இயக்கத்தில் நடிப்பில் விலோ திரைப்படம் உருவாகி உள்ளது. இப்படம் அக்டோபர் 19ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.
இதற்கு முன்னதாக அவர் லெக்சஸ் கார் வைத்திருந்தார். அந்த காரை விக்ரம் படத்தின் வெற்றிக்காக கமல்ஹாசன் பரிசாக வழங்கி இருந்தார். அந்த லெக்சஸ் காரின் மதிப்பு ரூ.80 லட்சம் ஆகும். தற்போது அதற்கு டபுள் மடங்கு பட்ஜெட்டில் பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் காரை வாங்கி இருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.
புது கார் வாங்கியபோது லோகேஷ் கனகராஜ் எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த காரின் மதிப்பு 1.70 கோடி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புது கார் வாங்கிய லோகேஷ் கனகராஜுக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.