லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் லியோ திரைப்படம் அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில், இந்தப் படத்தின் இறுதிக் கட்டப்பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அனிருத் இசையமைக்கும் இந்தப் படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்து வருகிறார். இந்தப் படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், கௌதம் மேனன், மிஷ்கின், பிரியா ஆனந்த் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.
கிட்டத்தட்ட 14 ஆண்டுகளுக்கு பிறகு விஜய்யும், த்ரிஷாவும் இந்தப் படத்தில் இணைந்து நடிக்கின்றனர். இதில் ஹைலைட் என்னவென்றால் விஜய்க்கு மட்டுமில்லை, த்ரிஷாவுக்கும் இது 67-வது படம். மேலும், இப்படத்தில் விஜய்யுடன் முழு படத்திலும் வருவேன் என சமீபத்தில் ஒரு பேட்டியில் கௌதம் மேனன் அப்டேட் வழங்கினார். ஏற்கனவே ஏராளமான நட்சத்திர பட்டாளங்கள் இந்தப் படத்தில் நடித்து வரும் நிலையில், புதிதாக பிரபல மலையாள பட நடிகை இந்தப் படத்தில் இணைந்துள்ளார். மோகன்லால் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற திரிஷ்யம் 2 படத்தில் நடித்த சாந்தி மாயாதேவி இந்தப் படத்தில் இணைந்துள்ளார். லோகேஷ் கனகராஜுடன் எடுத்துக்கொண்ட போட்டோவை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து, இதனை உறுதி செய்துள்ளார்.