பிரபல காமெடி நடிகர் கமலஹாசன் நடிக்கும் திரைப்படத்துடன் நடிப்பை நிறுத்திக்கொள்வதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தெலுங்கு, தமிழ் போன்ற மொழிகளில் வடிவேலுவுக்கு இணையாக நடித்து வந்தவர் நடிகர் பிரம்மானந்தம். 66 வயதாகும் இவர் வடிவேலுவை பார்த்தாலே எப்படி அனைவருக்கும் சிரிப்பு வருமோ அதே போல பிரம்மானந்தத்தை பார்த்தாலே சிரிப்பு வரும் அந்த அளவிற்கு நகைச்சுவையை வெளிப்படுத்துவார். மீம்ஸ் கிரியேட்டர்கள் ஒரு புறம் வடிவேலுவை வைத்து கலக்கினார்கள் என்றால் அதே போல தெலுங்கில் பிரம்மானந்தம் காமெடியில் பின்னி எடுப்பார்.
தெலுங்கு சினிமாவில் இவர் கிட்டத்தட்ட 1200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அதிக படங்களை நடித்தவர் என்ற பெருமையும் அவரையே சேரும். இதற்காக கின்னஸ் புத்தகத்தில் கூட இடம்பிடித்துள்ளார். தமிழில் மொழி, சரோஜா, மரகத நாணயம் போன்ற திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.

இந்நிலையில் அவர் 2017ல் சபாஷ் நாயுடு என்ற படத்தில் அவர் ஒப்பந்தமானார். இந்த படம் கமல்ஹாசன் இயக்கி , ஸ்ருதிஹாசன், ரம்யாகிருஷ்ணன் நடித்துள்ளனர். பாதியில் நின்ற இத்திரைப்படத்தில் பிரம்மானந்தம் பணியாற்றி உள்ளார். இதனால் ஒருவேளை இந்த படத்தை இவர் மீண்டும் தொடங்கினால் அதில் நடித்துவிட்டு மொத்த நடிப்பு வாழ்க்கைக்கும் ஓய்வளிக்கப்போவதாக தெரிவிக்கப்பட்டு வருகின்றது. வடிவேலுவைப்போலவே முக பாவனைகளில் அல்டிமேட் காமெடியன் இவர்… இவர் நடித்த முதல் படம் 1987ல் வெளிவந்த ஆஹா நா பெல்லன்டா என்ற படம். 2022ல் பீம்லா நாயக் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
