புகழ்பெற்ற மராத்தி பாடகி சுலோச்சனா சவான் வயது மூப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 92.
புகழ்பெற்ற மராத்தி பாடகியான சுலோச்சனா சவான் தனது ஆத்மார்த்தமான லாவணி நாட்டுப்புற பாடல்களுக்காக அறியப்பட்டவர். அவர் தனது வாழ்நாள் முழுவதும் மராத்தி நாட்டுப்புற இசைக்காக அர்பணித்துக் கொண்டார். மேலும் மங்கேஷ்கர் சகோதரிகளுடன் சேர்ந்து, மராத்தி வரலாற்றில் சிறந்த பெண் பாடகர்களில் ஒருவராக சுலோச்சனா சவான் திகழ்ந்தார். கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த சுலோச்சனா, மும்பையின் கிர்கானில் உள்ள அவரது ஃபனாஸ் வாடி இல்லத்தில் நேற்று காலமானார். இவரது மகன் விஜய் சவான், தனது தாயார் இறந்துவிட்டார் என்பதை உறுதிப்படுத்தினார்.

இந்நிலையில் வயது மூப்பு காரணமாக உயிரிழந்த சுலோச்சனா சவானின் மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பல தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும், திரையிலகினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.