fbpx

சூர்யா-சிறுத்தை சிவா கூட்டணி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்..! வெளியான மாஸ் அப்டேட்..!

சூர்யா – சிறுத்தை சிவா கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் நாளை வெளியாகிறது.

கடந்த சில வாரங்களாக சூர்யா – சிறுத்தை சிவா கூட்டணி பற்றித்தான் கோலிவுட் முழுக்க பேச்சாக இருந்தது வருகிறது. இதுகுறித்த அறிவிப்பு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே வந்த நிலையில், சில காரணங்களால் இப்படம் தள்ளிப்போனது. படம் குறித்து ரசிகர்கள் மத்தியில் பல்வேறு கேள்விகள் இருந்த நிலையில், அதற்குப் பதில் அளிக்கும் விதமாக ஆகஸ்ட் 21ஆம் தேதி சூர்யா – சிறுத்தை சிவா படத்தின் பூஜை நடைபெற்றது. தற்போது படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இயக்குநர் சிறுத்தை சிவாவின் கனவுப் படம் எனக் கூறப்படும் இப்படம் 2 பாகங்களாகவும் 10 மொழிகளில் வெளியிடவும் படக்குழு திட்டமிட்டுள்ளது.

சூர்யா-சிறுத்தை சிவா கூட்டணி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்..! வெளியான மாஸ் அப்டேட்..!

இந்நிலையில் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஆகஸ்ட் 24ஆம் தேதி துவங்கியது. இப்படத்தின் முதல் நாள் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை இயக்குநர் சிறுத்தை சிவா, தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத், நடிகர் சூர்யா உள்ளிட்டோர் பகிர்ந்தனர். மேலும் இப்படத்தில் கதாபாத்திரங்கள், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், டீசர், குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட நிலையில் நாளை (செப்.9) காலை 10 மணி அளவில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் வெளியிடப்படும் எனப் படக்குழு அறிவித்துள்ளது.

Chella

Next Post

மதுரையில் ஏற்பட்ட தீ விபத்தால் பரபரப்பு... லேப்டாப் சார்ஜ் போட்ட போது மின் கசிவால் விபரீதம்..!

Thu Sep 8 , 2022
திருமங்கலம் முகமதுஷாபுரம் தேவர் தெருவில் வசிப்பவர் மாணிக்கம்(28). இவர் கார் டிரைவராக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி இந்துமதி. இந்துமதி  இரவு 7 மணி அளவில் லேப்டாப் சார்ஜ் இல்லாததால் லேப்டாப்பிற்கு சார்ஜ் போட்டு விட்டு மெத்தையில் வைத்துள்ளார். அப்போது மின்கசிவினால் திடீரென லேப்டாப் சார்ஜர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டுள்ளது. நொடிப்பொழுதில் மளமளவென தீ எரிய தொடங்கியது. இதனால் அதிர்ச்சியடைந்த இந்திராணி வீட்டை விட்டு வெளியே ஓடி […]

You May Like