fbpx

’காட்ஃபாதர்’ படத்தின் ட்ரெய்லர் வெளியீடு..!! மிரட்டும் சிரஞ்சீவி, நயன்தாரா..!!

’காட்ஃபாதர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் வீடியோ சமீபத்தில் வெளியான நிலையில், இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

மலையாளத்தில் ப்ரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான படம் ‘லூசிபர்’. இப்படத்தை தற்போது தெலுங்கில் ரீமேக் செய்துள்ளனர். இதில், சிரஞ்சீவி ஹீரோவாக நடிக்கிறார். தமிழில், ஜெயம், சந்தோஷ் சுப்ரமணியம், உனக்கும் எனக்கும், வேலாயுதம், தனி ஒருவன், வேலைக்காரன் போன்ற பல படங்களை இயக்கிய மோகன் ராஜா, லூசிபர் திரைப்படத்தை தெலுங்கு ரீமேக்கை இயக்கியுள்ளார்.

’காட்ஃபாதர்’ படத்தின் ட்ரெய்லர் வெளியீடு..!! மிரட்டும் சிரஞ்சீவி, நயன்தாரா..!!

இப்படத்தின் கதாநாயகியாக நயன்தாரா நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரத்தில் சல்மான் கான் நடித்திருக்கிறார். ‘சூப்பர் குட் ஃபிலிம்ஸ்’ மற்றும் ‘என்.வி.ஆர் ஃபிலிம்ஸ்’ இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது. இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். ‘காட்ஃபாதர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் வீடியோ சமீபத்தில் வெளியாகி இணையத்தில் வைரலானது. இதையடுத்து இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளில் உருவாகியுள்ள இந்த ட்ரெய்லர் சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இப்படம் அக்டோபர் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

Chella

Next Post

பிஎஃப்ஐ அமைப்பின் ட்விட்டர் பக்கம் நீக்கம்... மத்திய அரசின் தடையை தொடர்ந்து நடவடிக்கை..

Thu Sep 29 , 2022
பிஎஃப்ஐ அமைப்புக்கு மத்திய அரசு தடை விதித்ததை தொடர்ந்து அந்த அமைப்பின் ட்விட்டர் பக்கமும் நீக்கப்பட்டுள்ளது.. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா என்ற அமைப்பு நாட்டில் பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதியுதவி அளித்தல், பயங்கரவாத செயல்களுக்கு ஆட்கள் சேர்த்தல், பயங்கரவாத தாக்குதல் நடத்த சதித்திட்டம் ஆகியவற்றில் ஈடுபடுவதாக புகார் எழுந்தது.. இதைத் தொடர்ந்து கடந்த 22-ம் தேதி, தேசிய புலனாய்வு அமைப்பு, அமலாக்கத்துறை நாடு முழுவதும் PFI அமைப்புக்கு எதிராக இரண்டு […]

You May Like