தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாக காமெடி நடிகர்களில் ஒருவர் கவுண்டமணி.. டைமிங்கில் கவுண்டர்களை கொடுக்கும் வகையிலான வசனங்களை பேசியதால் தான் அவருக்கு கவுண்டர் மணி என்ற பெயர் வந்தது.. பின்னர் அவரின் கவுண்டமணியாக மாறியது.. அவரின் காமெடிகளுக்கு இன்றளவும் தனி ரசிக பட்டாளாமே உள்ளனர்..

மீம் கிரியேட்டர்களும் அவரின் காமெடி வசனங்களை ட்ரோல் செய்வதற்கு பயன்படுத்துகின்றனர். ரஜினி, கமல் சத்யராஜ், கார்த்தி, பிரபு, சரத்குமார் என அப்போது முன்னணியில் இருந்த பல ஹீரோக்களுடன் இணைந்து நடித்துள்ளார்.. மேலும் கவுண்டமணி – செந்தில் இணைந்து நடித்த காமெடி காட்சிகள் இன்று வரைல் பிரபலமாக உள்ளன.. எவ்வளவு பெரிய ஹீரோவாக இருந்தாலும், வாயா போயா வாடா போடா என கிண்டலும் நக்கலும் கலந்த வசனங்களையே கவுண்டமணி பேசுவாராம்.. இதனால் பல நேரங்களில் பல முன்னணி நடிகர்கள் கவுண்டமணியை தவிர்த்ததாகவும் கூறப்படுகிறது..
எனினும் கவுண்டமணிக்கு திருப்புமுனையை ஏற்படுத்திய படம் என்றால் அது, கரகாட்டக்காரன் படம் தான்.. அந்த படத்தில் வந்த வாழைப்பழ காமெடிக்கு பிறகு தவிர்க்க முடியாத காமெடி நடிகராக மாறினார்.. அப்படி அவர் தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருந்தபோது, ஷர்மிளி எனும் ஒரு நடிகையோடு தொடர்பு வைத்திருந்ததாக கூறப்படுகிறது. ‘எல்லாம் மேல இருக்குறவன் பார்த்துப்பான்’ என்ற கவுண்டமணியின் டயலாக் மிகவும் பிரபலமான ஒன்று..
ஆவாரம்பூ படத்தில் இடம்பெற்ற அந்த காமெடி காட்சியில் பயில்வான் ரங்கநாதனுக்கு மனைவியாக ஷர்மிலி நடித்திருப்பார்.. அந்த நடிகைக்காக கவுண்டமணி நிறைய செலவு செய்துள்ளாராம்.. மேலும் தனது குடும்பத்தினருக்கு தெரியாமல் ஷர்மிளிக்கு ஒரு வீட்டையே வாங்கி கொடுத்துள்ளாராம்… இந்த தகவலை பயில்வான் ரங்கநாதன் தான் கூறியுள்ளார். திரைப் பிரபலங்களின் தனிப்பட்ட வாழ்க்கை, கிசுகிசு குறித்து பேசி வரும் பயில்வான் ரங்கநாதம் அவ்வப்போது பல சர்ச்சைகளில் சிக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது..