தி வயர் மற்றும் ஜான் விக் படத்தில் நடித்துள்ள நடிகர் லான்ஸ் ரெட்டிக் தனது 60 வயதில் காலமானார்.
லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள அவரது வீட்டில் அவர் இயற்கையான காரணங்களால் இறந்ததை அவரது மேலாளர் உறுதிப்படுத்தியுள்ளார். அடுத்த வாரம் வெளியாகவுள்ள ஜான் விக்: அத்தியாயம் 4 இல் ரெட்டிக் சமீபத்தில் தனது பாத்திரத்திற்காக நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்டார். HBO இன் ஹிட் க்ரைம் டிராமாவான தி வயர் இல் பால்டிமோர் போலீஸ் லெப்டினன்ட் செட்ரிக் டேனியல்ஸாக நடித்தது ரெட்டிக்கின் மிகவும் பிரபலமான கதாபாத்திரங்களில் ஒன்றாகும்.
கடந்த 2019இல் ஒரு நேர்காணலில், அவர் அதை ‘வரலாற்றின் ஒரு சின்னமான பகுதி’ என்று குறிப்பிட்டார். மேலும் ‘நாங்கள் செய்த பணி மிகவும் அதிர்ஷ்டமாகவும் பெருமையாகவும்’ உணர்ந்ததாகத் தெரிவித்தார். ரெட்டிக்கின் டிவி பாத்திரங்களில் ஓஸ், லாஸ்ட், போஷ் ஆகியவை முக்கிய பாத்திரங்களாக மக்களிடம் நீங்காமல் நிலைத்திருக்கின்றன. பெரிய திரையில், ரெட்டிக்கின் வரவுகளில் ஒயிட் ஹவுஸ் டவுன், சில்வீஸ் லவ், பிரதர் டு பிரதர் மற்றும் ஜான் விக் ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். இந்நிலையில், இவரின் திடீர் மரணம் திரைத்துறை வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவருக்கு ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினர் பலரும் இரங்கள் தெரிவித்து வருகின்றனர்.