fbpx

பெரும் சோகம்..!! வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற பழம்பெரும் திரைப்பட நடிகை காலமானார்..!!

பழம்பெரும் திரைப்பட நடிகை ஜரானா தாஸ், வயது மூப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 77.

ஒடிசாவின் கட்டாக்கில் வசித்து வந்த நடிகை ஜரானா தாஸ், கடந்த சில காலமாகவே உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இவர் சின்னஞ்சிறு வயது முதலே திரைப்படங்களில் நடித்து வந்தார். இவரின் நடிப்பில் ஸ்ரீ ஜெகந்நாத், நாரி, அடின மேகா, அமடா பட்டா உள்ளிட்ட பல திரைப்படங்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்றன. இவர் பல்வேறு மத்திய – மாநில அரசு விருதுகளை தமது நடிப்பிற்காக பெற்றுள்ளார். குறிப்பாக, வாழ்நாள் சாதனையாளர் விருதான ஜெயதேவ் புரஸ்கார் விருதைப் பெற்றுள்ளார்.

பெரும் சோகம்..!! வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற பழம்பெரும் திரைப்பட நடிகை காலமானார்..!!

நடிகை ஜரானா, முதலில் கட்டாக் வானொலி நிலையத்தில் அறிவிப்பாளராகவும், துார்தர்ஷனில் துணை இயக்குனராகவும் பணிபுரிந்தவர். ஒடிசா முன்னாள் முதல்வர் ஹரேகிருஷ்ண மஹ்தாப் குறித்த இவரது ஆவணப்படம், பலரது பாராட்டைப் பெற்றது. ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், இவரது இறப்பிற்கு இரங்கல் செய்தியை பதிவிட்டுள்ளார். அத்துடன் ஜரானாவின் இறுதிச் சடங்குகள் முழு அரசு மரியாதையுடன் நடைபெறும் என தெரிவித்துள்ளார். மேலும், திரையுலக பிரபலங்கள், ஒடிசா திரையுலகம், ரசிகர்கள், நண்பர்கள், உறவினர்கள் இவர்களுடன் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் என பலரும் ஜரானாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Chella

Next Post

கோவில்களினுள் செல்போன் எடுத்து செல்வதற்கு தடையா..? அதிரடி உத்தரவு..!

Sat Dec 3 , 2022
பல கோவில்களில் செல்போனில் படம் எடுப்பதை கோவில் நிர்வாகம் அனுமதிப்பதில்லை. திருமலை திருப்பதி கோவிலுக்குள் பக்தர்கள் யாரும் செல்போன் எடுத்த செல்ல கூடாது என்றும் மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கும் செல்போன்கள் கொண்டு போக அனுமதி இல்லை என்றும் அரசு தெறிவித்துள்ளது. நாம் எடுத்துச் செல்லும் செல்போன்களை டிக்கெட் வாங்கிக் கொண்டு அங்கே இருக்கும் லாக்கர்களில் வைத்துவிட்டு செல்ல வேண்டும். இதன் பின்னர் சாமி கும்பிட்டு திரும்பி வரும்போது டிக்கெட்டை கொடுத்து […]
இந்து சமய அறநிலையத்துறை

You May Like