fbpx

அறுவை சிகிச்சை செய்து உடல் எடையை குறைத்த ஹன்சிகா..? அவரே சொன்ன ஷாக்கிங் தகவல்..!!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஹன்சிகா. இவருக்கு கடந்தாண்டு திருமணம் நடைபெற்றது. இவர் சோஹைல் கதூரியா என்கிற தொழிலதிபரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். சோஹைல் கதூரியா ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர். அவர் ஹன்சிகாவை 2-வது திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமணம் ஜெய்ப்பூரில் உள்ள 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த அரண்மனையில் நடைபெற்றது.

நடிகை ஹன்சிகா திருமணத்துக்கு பின்னரும் சினிமாவில் தொடர்ந்து பிசியாக நடித்து வருகிறார். சினிமாவில் அறிமுகமான புதிதில் கொழுகொழுவென இருந்த ஹன்சிகா, அதன்பின் திடீரென உடல் எடையை குறைத்து ஸ்லிம்மான தோற்றத்துக்கு மாறினார். ஒல்லியான பின்னர் பிகினி உடையில் போட்டோஷூட் நடத்தி அதகளப்படுத்தி இருந்தார். இருப்பினும் தான் எப்படி உடல் எடையை குறைத்தேன் என்கிற சீக்ரெட்டை வெளியிடாமல் இருந்தார்.

அறுவை சிகிச்சை செய்து உடல் எடையை குறைத்த ஹன்சிகா..? அவரே சொன்ன ஷாக்கிங் தகவல்..!!

இந்நிலையில், சர்வதேச யோகா தினம் அண்மையில் கொண்டாடப்பட்டது. அப்போது யோகா செய்தபடி இருக்கும் புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு இருந்த ஹன்சிகா, தான் உடல் எடையை குறைத்ததற்கு யோகாவும் உதவியதாக கூறியிருந்தார். இதைப் பார்த்த நெட்டிசன் ஒருவர், அறுவை சிகிச்சை செய்து உடல் எடையை குறைத்துவிட்டு யோகா மூலம் இப்படி ஆனதாக கூறுகிறீர்களே என கமெண்ட் செய்திருந்தார்.

அந்த நெட்டிசனின் கமெண்ட் பார்த்து கடுப்பான நடிகை ஹன்சிகா, அதற்கு ரிப்ளை செய்துள்ளார். அதில், நான் இப்போது இருக்கும் தோற்றத்திற்கு வர நிறைய கடின உழைப்பு தேவைப்பட்டது. நிறைய யோகா பயிற்சி செய்ததும் ஒரு காரணம் தான். இதில் காமெடி என்னவென்றால் யோகா பாசிடிவிட்டியை பரப்புவதோடு வெறுப்பை குறைக்கும் என பதிவிட்டு அந்த நெட்டிசனுக்கு தரமான பதிலடி கொடுத்திருந்தார்.

Chella

Next Post

திருவேற்காடு அருகே கடத்தப்பட்ட நபர் பொன்னமராவதியில் மீட்பு…..! காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை…..!

Fri Jun 23 , 2023
மதுரையைச் சேர்ந்த தேவ்ஆனந்த்(29) பாத் இசை கலைஞரான இவர் நண்பர்களுடன் சேர்ந்து இசைக்கச்சேரி நடத்தி வருகிறார் இத்தகைய நிலையில், தேவ் ஆனந்த் நேற்று முன்தினம் இரவு சென்னை நுங்கம்பாக்கத்தில் இருக்கின்ற உணவகம் ஒன்றில் 5 நண்பர்களுடன் சேர்ந்து இசை கச்சேரியை நடத்தி இருக்கிறார். அந்த கச்சேரியை முடித்துவிட்டு 2 நண்பர்களை திருவேற்காடு அருகே உள்ள அயனம்பாக்கம் பகுதியில் இருக்கின்ற அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் இருக்கின்ற அவரது வீட்டில் விட கார் […]
இதுக்கா இப்படியொரு தண்டனை...மகனுக்கு சூடு போட்டு; கண்ணில் மிளகாய் பொடியை தூவிய கொடூர தாய்...கேரளாவில் பயங்கரம்!

You May Like