fbpx

இதை கவனிச்சிருக்கீங்களா..? கமலும் நயன்தாராவும் ஏன் ஒரு படத்தில் கூட சேர்ந்து நடிக்கவில்லை..? காரணம் இதுதானாம்..!!

தென்னிந்தியாவின் டாப் நடிகையாக திகழ்ந்து வருபவர் நயன்தாரா. இவர், சமீப காலமாக பெண்களை மையப்படுத்தி எடுக்கப்படும் திரைப்படங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் முன்னணி நடிகருடன் பல திரைப்படங்களில் ஜோடி சேர்ந்து நடித்திருக்கிறார்.

இதுவரை ரஜினி, அஜித், விஜய், சூர்யா, சிம்பு, தனுஷ் போன்ற டாப் நடிகர்களுடன் நயன்தாரா நடித்திருந்தாலும் இதுவரை கமல்ஹாசனுடன் ஒரு திரைப்படத்தில் கூட நடித்ததில்லை. இருவரும் சேர்ந்து ஒரு திரைப்படத்திலாவது நடிப்பார் என ரசிகர்கள் ஆவலோடுதான் காத்திருக்கின்றனர். ஆனால், அதற்கான எவ்வித முகாந்திரமும் தற்போது வரை இல்லாமல் இருக்கிறது.

இந்நிலையில், பிரபல தயாரிப்பாளரும் நடிகருமான சித்ரா லட்சுமணன், நயன்தாரா கமல்ஹாசனுடன் ஜோடி சேர்ந்து நடிக்காதது குறித்து ஒரு வீடியோவில் தனது கருத்தை பகிர்ந்துள்ளார். “கமல்ஹாசனும் நயன்தாராவும் சேர்ந்து நடிக்காததற்கு பல காரணங்கள் இருக்கின்றன. குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் இப்போது கமல்ஹாசன் நடித்துக்கொண்டிருக்கின்ற படங்களில் கதையமைப்பும் ஒரு காரணமாக இருக்கிறது.

அதில் நயன்தாராவுக்கு பொருத்தமான பாத்திரங்கள் இருக்க வேண்டும் அல்லாவா? நயன்தாராவுக்கு வேலை வைக்கும் கதாப்பாத்திரமாக இருந்தால்தானே நயன்தாராவை அதில் நடிக்க வைக்க முடியும்” என அந்த வீடியோவில் சித்ரா லட்சுமணன் கூறியிருந்தார்.

Read More : நாய்கள் ஏன் இரவு நேரத்தில் மட்டும் அதிகம் குரைக்கிறது தெரியுமா..? இவ்வளவு விஷயம் இருக்கா..?

English Summary

Even though Nayanthara has acted with top actors like Rajini, Ajith, Vijay, Suriya, Simbu, Dhanush, she has never acted in a single film with Kamal Haasan.

Chella

Next Post

திருமணமான பெண்ணை அழைத்து வந்து 3 வருடங்களாக உல்லாசம்..!! திடீரென உள்ளே நுழைந்த போலீஸ்..!! இவரும் விட்டு வைக்கல..!!

Thu Sep 26 , 2024
In the case of counterfeiting, Vellavedu Police Station Head Constable Yesudas has been transferred to Avadi Armed Forces.

You May Like