நடிகரும், சினிமா விமர்சகருமான பயில்வான் ரங்கநாதன், நடிகர் மற்றும் நடிகைகளின் அந்தரங்க விஷயங்களை தனது யூடியூப் சேனல் மூலம் கூறி வருகிறார். இதற்கு சினிமா பிரபலங்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், பழம்பெரும் நடிகரான முத்துராமன், பிராமணப் பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவருக்குப் பிறந்த மகனான கார்த்திக், அலைகள் ஓய்வதில்லை படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.
தன்னுடைய முதல் படத்தில் ஜோடியாக நடித்த ராதா உடனே கார்த்திக் கிசுகிசுக்கப்பட்டார். அதன் பிறகு அவரது படத்தில் நடிக்கும் பல நடிகைகளுடன் கார்த்திக் உறவில் இருந்ததாக கூறியிருக்கிறார். அதுவும் தன்னுடன் நடிக்கும் நடிகைகளை பதம் பார்க்காமல் கார்த்திக் விடவே மாட்டாராம். அப்படிப்பட்ட முத்துராமனுக்கு இப்பேற்பட்ட மகனா என கோலிவுட் சினிமாவே அப்போது இவரை மோசமாக பேசினார்களாம். மேலும், அப்போதே அப்பா பெயரை கார்த்திக் குழி தோண்டி புதைத்து விட்டார் என கடுமையாக விமர்சித்துள்ளார் பயில்வான். இதைக் கேட்ட கார்த்திக் ரசிகர்கள் பயில்வானை திட்டி தீர்த்து வருகின்றனர்.