பரியேறும் பெருமாள் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான மாரி செல்வராஜ் இன்று தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருக்கிறார். இயக்குனர் ராமிடம் கற்றது தமிழ், தங்கமீன்கள் படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றியவர் தான் மாரி செல்வராஜ். உதயநிதியின் நடிப்பில் சில நாட்களுக்கு முன்பு வெளியான மாமன்னன் திரைப்படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
என்னதான் இப்படம் சில சலசலப்புகளை ஏற்படுத்தினாலும் பெரும்பாலான ரசிகர்கள் மாமன்னன் படத்திற்கு தங்களின் ஆதரவை கொடுத்து வருகின்றனர். இதன் காரணமாக மாமன்னன் திரைப்படம் விமர்சன ரீதியாக மட்டுமல்லாமல் வசூல் ரீதியாகவும் வெற்றிநடைபோட்டு வருகிறது. இந்நிலையில், மாமன்னன் படத்தில் வடிவேலுவை வித்தியாசமான ரோலில் மாரி செல்வராஜ் காட்டியதும், அவர் எடுத்துக்கொண்ட கதைக்களமும் ரசிகர்களின் பாராட்டை பெற்று வருகிறது.
இப்படத்தில் நடித்த நடிகர்கள் அனைவரும் தங்களின் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தனர். இதன் காரணமாக அவர்களின் அடுத்த படத்திற்கான சம்பளம் கணிசமாக உயர்ந்துள்ளது என பேசப்பட்டு வருகின்றது. அந்த வகையில், மாரி செல்வராஜ் அடுத்ததாக இயக்கவுள்ள படத்தின் சம்பளமும் கணிசமாக உயர்ந்துள்ளதாம். இந்நிலையில், மாமன்னன் படத்தை இயக்குவதற்காக மாரி செல்வராஜ் சுமார் ரூ.5 கோடி வரை சம்பளமாக வாங்கியுள்ளாராம். இதையடுத்து மாமன்னன் படம் ஹிட்டானதை அடுத்து அடுத்த படத்திற்கான அவரின் சம்பளம் கண்டிப்பாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.