தென்னிந்திய சினிமா நடிகர்களில் முன்னணியில் இருக்கும் விஜய், சிறுவயதில் இருந்தே நடிக்க தொடங்கியவர். ரஜினியை தொடர்ந்து ரூ. 100 கோடிக்கு சம்பளம் வாங்கும் அளவிற்கு வளர்ந்துள்ள இவர், தற்போது லோகேஷ் கனகராஜின் லியோ படத்தில் நடித்து முடித்துள்ளார். படத்திற்கான போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இதற்கிடையே, இவர் தனது அப்பா எஸ்ஏசி உடன் சண்டை போட்டு சில காலம் பேசாமல் இருந்து வந்தார். இதற்கு முன் பட விழாவில் விஜய் அவரது அப்பாவை கண்டுகொள்ளாமல் சென்றது கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. வாரிசு படத்தில் அப்பா செண்டிமெண்ட் பேசிய விஜய், நிஜ வாழ்க்கையில் அப்பா அம்மாவை ஒதுக்கி வைத்திருப்பதாக விமர்சனங்கள் எழுந்தது.
எஸ்ஏசி சமீபத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அமெரிக்காவில் தனது அடுத்த பட வேலைகளில் பிசியாக இருந்த நடிகர் விஜய் சமீபத்தில்தான் இந்தியா திரும்பினார். இந்நிலையில் தற்போது விஜய் நேராக அப்பா எஸ்ஏசியை சந்தித்து நலம் விசாரித்து இருக்கிறார். அப்பா மற்றும் அம்மா இருவருடனும் விஜய் இருக்கும் போட்டோ தற்போது வைரலாகி வருகிறது.