fbpx

’மகளுக்காக இதை செய்கிறேன்’..!! 50 வயதில் தனது மகளுக்காக பிரபுதேவா செய்யும் ஸ்பெஷல் விஷயம்..!!

டான்ஸ் மாஸ்டர், நடிகர், இயக்குனர் என பன்முக திறமை கொண்ட பிரபுதேவாவுக்கு முதல் மனைவி உடன் 3 மகன்கள் இருக்கின்றனர். முதல் மனைவியை பிரிந்த பிறகு அவர் நடிகை நயன்தாரா உடன் காதலில் இருந்தார். அந்த காதல் தோல்வியில் முடிந்த நிலையில், ஹிமானி என்பவரை 2020ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். தற்போது இரண்டாம் மனைவி உடன் பிரபுதேவாவுக்கு மகள் பிறந்திருக்கிறார்.

அது பற்றிய செய்தி சமீபத்தில் வைரல் ஆனது. அதை பிரபுதேவாவும் உறுதி செய்திருக்கிறார். தற்போது ஒரு பேட்டியில் பேசி இருக்கும் அவர், “நான் தற்போது ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறேன். தற்போது மகள் மற்றும் குடும்பத்துடன் நேரத்தை செலவிட நான் எனது வேலைபளுவை குறைத்துக்கொண்டிருக்கிறேன். இதுவரை நிற்காமல் ஓடிய நான் மகளுக்காக இதை செய்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.

Chella

Next Post

சீன மொபைல் போன் நிறுவனங்களின் உயர்பொறுப்புகளில் இந்தியர்களை நியமிக்க வேண்டும்!... மத்திய அரசு!

Wed Jun 14 , 2023
இந்தியர்களை தலைமை நிர்வாக அதிகாரிகளாகவும், சிஓஓ-க்களாகவும் உள்ளிட்ட உயர் பொறுப்புகளில் நியமிக்க வேண்டும் என்று சீன மொபைல் போன் உற்பத்தியாளர்களிடம் மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. சீன மொபைல் போன் உற்பத்தியாளர்களை தங்கள் உள்ளூர் நடவடிக்கைகளில் இந்திய பங்கு பங்குதாரர்களை சேர்க்குமாறு மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. அதாவது, சீன மொபைல் போன் தயாரிப்பாளர்கள், இந்தியாவில், அவற்றின் வணிக நடவடிக்கைகளை நிர்வகிக்கும் முக்கிய பொறுப்புகளில் இந்தியர்களை அமர்த்துமாறு, மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளதாக […]

You May Like