fbpx

’அந்த நபர் என்னை தவறாகத் தொட்டதால் அடித்தேன்’..!! பொன்னியின் செல்வன் பட நடிகை பகீர் தகவல்..!!

தன்னை தவறாக தொட்ட நபரை அடித்ததாக நடிகை ஐஸ்வர்யா லட்சுமி தெரிவித்துள்ளார்.

மலையாளத்தில் 2017ஆம் ஆண்டு அறிமுகமான நடிகை ஐஸ்வர்யா லெஷ்மி, ‘மாயாநதி’ படம் மூலம் மலையாளம் தாண்டி, பிற மொழி சினிமா ரசிகர்களையும் ஈர்த்தார். தமிழில் நடிகர் தனுஷூடன் ‘ஜெகமே தந்திரம்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான ஐஸ்வர்யா லெஷ்மி, புத்தம்புது காலை, கார்கி, கேப்டன் உள்ளிட்ட படங்களில் நடித்தார். மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படம் அவருக்கு திருப்புமுனையாக அமைந்தது.

’அந்த நபர் என்னை தவறாகத் தொட்டதால் அடித்தேன்’..!! பொன்னியின் செல்வன் பட நடிகை பகீர் தகவல்..!!

குறிப்பாக அவரது பூங்குழலி கதாபாத்திரம் மற்றும், ஏ.ஆர். ரஹ்மான் இசையில் அமைந்த ‘அலைகடல்’ பாடல்கள் சூப்பர் ஹிட்டாக அமைந்த நிலையில், ஐஸ்வர்யா லெஷ்மியை கோலிவுட் ரசிகர்கள் கொண்டாடத் தொடங்கினர். முன்னதாக விஷ்ணு விஷாலுடன் ஐஸ்வர்யா லெஷ்மி நடித்த ‘கட்டா குஸ்தி’ படம் டிசம்பர் 2ஆம் தேதி வெளியான நிலையில், குஸ்தி வீராங்கனையாக நடித்துள்ள அவரது கதாபாத்திரம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்நிலையில், தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், தன்னை தவறாக தொட்ட நபரை அடித்ததாகத் தெரிவித்துள்ளார்.

’அந்த நபர் என்னை தவறாகத் தொட்டதால் அடித்தேன்’..!! பொன்னியின் செல்வன் பட நடிகை பகீர் தகவல்..!!

“நகைச்சுவையை மையமாக வைத்து தயாரான எந்தப் படத்திலும் இதுவரை நடிக்காமல் இருந்த எனக்கு முதல் தடவையாக ’கட்டா குஸ்தி’ படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்தப் படம் எனக்கு ஒரு சவாலாகவும் இருந்தது. சமீப காலமாக நகைச்சுவைப் படங்கள் அதிகம் வரவில்லை. நான் உணர்வுப்பூர்வமான கதாபாத்திரங்களில் சர்வ சாதாரணமாக நடித்து விடுவேன். ஆனால் நகைச்சுவையாக நடிப்பது கஷ்டம். குஸ்தி வீராங்கனையாக இந்தப் படத்தில் நடித்துள்ளேன். என் பாத்திரத்தை சவாலாக ஏற்று நடித்திருக்கிறேன். ஏற்கனவே ஒருவரை நான் அடித்த சம்பவம் நடந்துள்ளது. அந்த நபர் என்னை தவறாகத் தொட்டார். அதனால் அடித்து விட்டேன். சமீப காலமாக அப்படி யாரையும் அடித்த அனுபவம் இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.

Chella

Next Post

’இளைஞர்களே தயாரா இருங்க’..!! தமிழகத்தில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்..!! எப்போது தெரியுமா?

Mon Dec 5 , 2022
தமிழகத்தில் மாதந்தோறும் ஒவ்வொரு மாவட்டங்களிலும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், நெல்லை மாவட்டம் அபிஷேகப்பட்டியில் வருகின்ற டிசம்பர் 9ஆம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் வேலைவாய்ப்பு முகாம் மற்றும் டிவிஎஸ் பயிற்சி நிறுவனம் இணைந்து நடத்தும் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் டிசம்பர் 9ஆம் தேதி அபிஷேகப்பட்டியில் உள்ள பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற உள்ளது. இந்த முகாமில் நெல்லை, […]

You May Like