பெங்காலி திரைப்பட நடிகரும், தயாரிப்பாளருமான அனிந்தியா சட்டர்ஜி வெளியிட்ட தனது பேஸ்புக் பதிவில், இன்று எனது பிறந்தநாள். போதைப்பொருள் பழக்கத்தில் இருந்து விடுதலையாகி 15-வது ஆண்டு தினமாகும். எனது உண்மையான பிறந்த நாள் டிசம்பர் 29ஆம் தேதி. ஆனால், போதை பழக்கத்தில் இருந்து வெளியே வந்த நாளை, மிகவும் சந்தோஷமான நாளாக கருதுகிறேன். கடந்த 2008இல் பாங்க்ஷால் நீதிமன்றத்தில் ஆஜரான பிறகு, எனது வாழ்க்கையில் முக்கிய திருப்பம் ஏற்பட்டது. அதன்பின் போதை பழக்கத்தில் இருந்து மீண்டு வெளியே வரவும், மறுவாழ்வுக்காகவும் போராடினேன். அன்றைய தினத்தில் எடுக்கப்பட்ட முடிவால், அன்றைய தினத்தை எனது மறுபிறப்பு தினமாக கடைபிடிக்கிறேன். சுமார் 7 ஆண்டுகளாக போதை பழக்கத்திற்கு அடிமையாகி இருந்த நான், தற்போது நலமாக இருப்பதை என்னால் கூட நம்ப முடியவில்லை.
![’என் தாயின் தங்க நகைகளையும், தந்தையின் வங்கி சேமிப்பையும் அழித்தேன்’..!! பிரபல நடிகர் உருக்கம்..!!](https://1newsnation.com/wp-content/uploads/2023/01/WhatsApp-Image-2023-01-23-at-6.24.48-PM.jpeg)
நான் போதைக்கு அடிமையானதால், என் தாயின் நகைகளும், தந்தையின் வங்கிச் சேமிப்யையும் அழித்தேன். ஒருகட்டத்தில் 28 வயது வரை கூட வாழ முடியாது என்பதை உணர்ந்தேன். என்னுடன் இருந்த 4 நண்பர்களும் போதை பழக்கத்தால் ஒவ்வொருவராக உயிரிழந்தனர். அவர்களின் இறப்பை பார்த்து பயந்தேன். நான் போதை பழக்கத்தில் இருந்து விடுபடுவேன் என்று யாருமே நம்பவில்லை. எனவே போதை பழக்கத்தில் இருந்து வெளியே வருவது எளிதான விஷயம் அல்ல. ஆனால் அதிலிருந்து மீண்டு குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக உள்ளேன்” என்று உருக்கமாக தெரிவித்துள்ளார்.