fbpx

’திருமணமே எனக்கு வேண்டாம்’..!! ’நான் லெஸ்பியன்’..? ’சின்ன வயசுலயே அதெல்லாம் பண்ணிட்டேன்’..!! அதிரவைத்த ஓவியா

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் அதிகம் கவரப்பட்டவர் நடிகை ஓவியா. இவருக்கு தனி ஆர்மி எல்லாம் ரசிகர்கள் உருவாக்கினர். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பார்த்த ஓவியாவை விட தற்போது பல மடங்கு போல்டாக மாறியிருக்கிறார். அந்தளவுக்கு படு போல்டாக பல விஷயங்களை வெளிப்படையாக பேசி வருகிறார்.

இதுகுறித்த ஒரு பேட்டியில், குடித்து தான் 90 ML படத்தின் ஹீரோயின் ஓவியா ஒண்ணுமில்லாமல் போய் விட்டாரா என்கிற கேள்விக்கு, ”சரக்கு எல்லாம் சின்ன வயசுலயே அடிச்சு முடிச்சுட்டேன். எதுவா இருந்தாலும், அதன் எக்ஸ்ட்ரீமை பார்த்துடுவேன். இப்போ எல்லாம் சரக்கு பெரிய விஷயமே இல்ல. அது இல்லாமலும் எனக்கான சந்தோஷத்தை நான் அடைகிறேன்” என்றார்.

மேலும், திருமணமே செய்து கொள்ள மாட்டேன் என்று சொல்கிறீர்கள்.. நீங்க என்ன லெஸ்பியனா என்ற கேள்விக்கு, கொஞ்சம் கூட கோபப்படாமல், ”நான் லெஸ்பியன் கிடையாது. ஆனால், எந்த ஒரு ஆண் தேவையும் எனக்கு இல்லை. திருமணம் செய்து கொண்டு தான் வாழவேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை. திருமணம் செய்துக் கொள்ள மாட்டேன் என்று தான் நினைக்கிறேன்” என்றார்.

அட்ஜெஸ்ட்மென்ட் பற்றி ஓவியா கூறுகையில், ”அதெல்லாம் பண்ணியிருந்தா நான் ஏன் பட வாய்ப்பு இல்லாமல் இருக்கேன். அப்படியெல்லாம் பண்ணிதான் பட வாய்ப்பு வாங்கணும்னு எனக்கு அவசியம் இல்ல. நான் அந்த மாதிரி பொண்ணும் இல்ல. அந்த மாதிரி ஹீரோயின்களும் இருக்காங்க. ஆனா, எல்லா ஹீரோயின்களும் அப்படின்னு சொல்ல வரல” என்றார்.

Chella

Next Post

எச்சரிக்கை..!! தேசிய நெடுஞ்சாலைகளில் இனி அதி வேகமாக சென்றால் சிக்கல்தான்..!! உடனே உங்கள் ஃபோனுக்கு வரும்..!!

Mon Aug 28 , 2023
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் புதிய மொபைல் செயலி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இது நெடுஞ்சாலையில் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யவும், மகிழ்ச்சியான அனுபவத்தை வழங்குவதற்காகவும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த செயலி குறித்தும், அதன் செயல்பாடுகள், பயன்கள் குறித்தும் விரிவான அறிக்கையும் வெளியாகியிருந்தது. ராஜ்மார்க்யாத்ரா என்றால் என்ன..? ராஜ்மார்க்யாத்ரா என்பது கூகுள் ப்ளே ஸ்டோர் + ஐஓஎஸ் ஆப் ஸ்டோர் இரண்டிலுமே கிடைக்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த செயலி, வாகன […]

You May Like