தமிழில் இமைக்கா நொடிகள், அடங்க மறு, அயோக்யா, அரண்மனை-3, திருச்சிற்றம்பலம், சர்தார் ஆகிய திரைப்படங்களில் நடித்து பிரபலமாகியவர் நடிகை ராஷிகன்னா. இவர் இந்தி, தெலுங்கிலும் அதிகளவு படங்களில் நடித்துள்ளார். தற்போது அவர் காதல் படங்களில் நடிக்க விரும்புவதாக தெரிவித்து இருக்கிறார். இது தொடர்பாக ராஷிகன்னா அளித்துள்ள பேட்டியில், “காதல் கதையம்சம் கொண்ட படங்களை ரசிகர்கள் விரும்பி பார்க்கின்றனர்.
காதல் படங்கள் போரடிக்காது. எனக்கு வித்தியாசமான காதல் திரைப்படங்களில் நடிக்க ஆர்வம் இருக்கிறது. அண்மை காலமாக தன்னிடம் பல இயக்குனர்கள் காதல் கதைகள் கூறி வருகின்றனர். எனினும் அந்த கதைகளில் கொஞ்சம் கூட புதுமையான விஷயங்கள் இல்லை. இந்தி நடிகர் கார்த்திக் ஆர்யன் காதல் கதைகளில் நடிப்பதற்கு பொருத்தமான நடிகர் ஆவார். அவருடன் சேர்ந்து நடிக்கவும் விருப்பம் இருக்கிறது” என்று அவர் கூறினார்.