fbpx

“விஜயை வைத்து படம் இயக்க ஆசை” “சர்க்கஸ்” பட இயக்குனர் கருத்து!!!

தற்போது தமிழ் திரை உலகில் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர்களில் ஒருவர் தளபதி விஜய். இவரை வைத்து படம் இயக்க ஏராளமான இயக்குனர்கள் வரிசையில் காத்திருக்கிறார்கள். காரணம் அந்தளவிற்கு தமிழ் சினிமாவில் இவர் கொடி கட்டி பறந்து வருகிறார்.

நடிகர் விஜய்க்கு சக நடிகர், நடிகைகளே ரசிகர்களாக இருந்து வருகிறார்கள். அது தொடர்பாக பல பிரபலங்கள் வெளிப்படையாகவே பேசிய சம்பவமும் நடைபெற்றிருக்கிறது. அந்த விதத்தில் தற்சமயம் ஹிந்தி பட இயக்குனர் ரோகித் ஷெட்டி தளபதி விஜய்யை வைத்து படம் இயக்க தான் விரும்புவதாக கூறியுள்ளார்.

சில தினங்களுக்கு முன்பு ரோகித் ஷெட்டி இயக்கி இருக்கும் சர்க்கஸ் திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நடந்தது. சர்க்கஸ் திரைப்படத்தில் ரன்வீர், பூஜா ஹெக்டே போன்ற பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்திருக்கிறார்கள். இந்த விழா மேடையில் பத்திரிகையாளர்களின் கேள்விக்கு பதிலளித்த இயக்குனர் ரோகித் ஷெட்டி தென்னிந்திய நடிகர்களை வைத்து படம் இயக்க விரும்புவதாக தெரிவித்திருக்கிறார்.

ரன்வீர் மற்றும் விஜய் உள்ளிட்டோரை வைத்து படம் எடுப்பீர்களா? என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர் விஜய் மற்றும் ரன்வீர் உள்ளிட்ட இருவருமே நன்றாக நடனம் ஆடத் தெரிந்தவர்கள். ஆகவே அவர்களுடன் பணிபுரிவது எனக்கு புது அனுபவத்தை வழங்கும் என்று தெரிவித்திருக்கிறார்.

Kathir

Next Post

படப்பிடிப்பில் நடைபெற்ற எதிர்பாராத விபத்து! சண்டை பயிற்சியாளர் பரிதாப பலி... சோகத்தில் திரையுலகம்!!!

Sun Dec 4 , 2022
தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் வெற்றிமாறன், அவர் தற்சமயம் இயக்கி வரும் திரைப்படம் தான் “விடுதலை”. இரண்டு பாகங்களாக உருவாகி வரும் இப்படத்தில் சூரி முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார், விஜய் சேதுபதி சிறப்பு தோற்றத்தில் நடித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் படத்தில் இணைந்துள்ளார். அதேபோல் தனுஷூம் ஒரு பாடலை பாடியுள்ளதால் எப்போது இந்த படம் வெளியாகும் என ரசிகர்கள் காத்துக்கிடக்கின்றனர். முதல் பாகத்தின் […]

You May Like