நடிகர் தனுஷின் ‘நானே வருவேன்’ திரைப்படத்தின் ரன்னிங் டைம், தணிக்கை சான்றிதழ் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
செல்வராகவன் இயக்கத்தில், நடிகர் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் ‘நானே வருவேன்’. இப்படத்தில் நடிகர் தனுஷ் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்துஜா ரவிச்சந்திரன், யோகி பாபு, பிரபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஸ்வீடனைச் சேர்ந்த எல்லி அவ்ரம் இந்தப் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். வி கிரியேஷன்ஸ் சார்பாக கலைப்புலி எஸ் தாணு இந்தப் படத்தை தயாரித்துள்ளார். இப்படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசைமையத்துள்ளார். அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். வருகிற 29ஆம் தேதி படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்தப் படத்தின் ரன்னிங் டைம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி படத்தின் ரன்னிங் டைம் 2 மணிநேரம் 15 நிமிடங்கள் என சொல்லப்படுகிறது. மேலும் படத்திற்கு யு/ஏ தணிக்கை சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அத்துடன் அமெரிக்காவில் 29ஆம் தேதிக்கான முன்பதிவு துவங்கியுள்ளதாக கூறப்படும் நிலையில், இதுகுறித்து ஓரிரு நாட்களில் படக்குழுவினர் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.