fbpx

”போண்டா மணிக்கு நிச்சயம் உதவி செய்வேன்”..! – நடிகர் வடிவேலு

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் நகைச்சுவை நடிகர் வடிவேலு சுவாமி தரிசனம் செய்தார்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் நகைச்சுவை நடிகர் வடிவேலு சுவாமி தரிசனம் செய்ய சென்றிருந்தார். சிறப்பான வரவேற்புக்குப்பின் முருகனை வழிபட்ட அவர், கோவில் பிரகாரத்தில் உள்ள சண்முகர் சன்னதி, பெருமாள் சன்னதி உள்ளிட்ட சன்னதிகளுக்கு சென்று அங்குள்ள தெய்வங்களை வழிபாட்டார்.

”போண்டா மணிக்கு நிச்சயம் உதவி செய்வேன்”..! - நடிகர் வடிவேலு

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ”நான் தற்போது நாய் சேகர் ரிட்டன்ஸ், மாமன்னன், சந்திரமுகி 2 ஆகிய படங்களில் நடித்து வருகிறேன். இதில், இயக்குனர் மாரி செல்வராஜின் மாமன்னன் திரைப்படத்தில் தான் குணசித்திர நடிகனாக நடித்துள்ளேன். மாமன்னன் திரைப்படத்தில் உதயநிதி ஸ்டாலினுடன் நடித்துள்ளேன். படம் நன்றாக வந்திருக்கிறது. நடித்து வருகின்ற படங்கள் அனைத்தும் காமெடியில் சிறந்ததாக இருக்கும்.

என்னோடு பல படங்களில் தொடர்ந்து நடித்த துணை நடிகர்களுக்கான காமெடி டிராக் தற்போது இல்லாததால் முன்பு போல் அவர்களுடன் சேர்ந்து நடிக்க இயலவில்லை. இப்போது வரும் படங்களில் எல்லாம் தனி காமெடி டிராக் இருப்பதில்லை. தனித்தனி கதாபாத்திரங்களே உள்ளன. என்னுடன் பல படங்களில் உடன் நடித்தவர் நடிகர் போண்டா மணி. அவர் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் இருக்கும் செய்தி அறிந்தேன். அவருக்கு நிச்சயம் உதவி செய்வேன். தற்போது நான் நடித்துள்ள திரைப்படங்களில் மக்கள் எதிர்பார்க்கும் காமெடிகள் அதிகமாகவே இருக்கும். ’நாய் சேகர் ரிட்டன்ஸ்’ படத்தில் பாடலும் பாடியுள்ளேன். அந்தப் பாடல் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெறும் என நம்புகிறேன்”. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Chella

Next Post

TVS நிறுவனத்தில் டிகிரி முடித்த நபர்களுக்கு வேலைவாய்ப்பு…! ஆர்வம் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கவும்…!

Fri Sep 23 , 2022
TVS நிறுவனத்தில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விருப்பம் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பலாம். இந்த Hub Head பணிகளுக்கு என பல்வேறு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிப்போர் தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் மட்டுமே தேர்வு செய்யப்படவுள்ளனர். விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் டிகிரி கட்டாயம் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். பணிக்கு […]

You May Like