தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் நடித்து வரும் வாணி போஜன், தற்போது ஊர்க்குருவி, பகைவனுக்கு அருள்வாய், பாயும் ஒளி நீ எனக்கு, லவ், ரேக்ளா, ஆர்யன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் நடித்த ‘செங்களம்’ வெப் சீரிஸ் ஓடிடியில் வெளியானது. இந்நிலையில் ஒரு பேட்டியில் இதுவரை தான் தவறவிட்ட படங்கள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். அதில், கடந்த 2021இல் வெளியாகி வரவேற்பை பெற்ற ‘பேச்சுலர்’ பட வாய்ப்பை தவறவிட்டது குறித்து வாணி போஜன் கூறுகையில், ‘பேச்சுலர்’ படத்தில் ஆரம்பத்தில் நடிக்கும் வாய்ப்பு எனக்கு தான் முதலில் வந்தது. ஆனால், இந்தப்படத்தின் கதாபாத்திரத்திற்கு நான் செட் ஆவேனா என்ற சந்தேகம் இருந்தது.
இந்தப்படத்தில் ஹீரோவுடன் நெருக்கமான காட்சிகள் இருப்பது எனக்கு தெரியும். நான் ‘பேச்சுலர்’ படத்தில் நடித்தால், எனக்காக ஹீரோயின் கேரக்டரில் பல காட்சிகளை இயக்குனர் மாற்றியிருப்பார். அவ்வாறு மாற்றுவதில் எனக்கு உடன்பாடு இல்லை. எனக்காக எந்த காட்சியையும் இயக்குனர் மாற்றக்கூடாது. இதற்காக அப்படத்தில் இருந்து நான் விலகிவிட்டேன் என தெரிவித்துள்ளார் நடிகை வாணி போஜன். ‘பேச்சுலர்’ படத்தில் வாணி போஜனுக்கு பதிலாக திவ்ய பாரதி, ஜிவி. பிரகாஷ் குமாருக்கு ஜோடியாக நடித்தார். லிவ் இன் ரிலேஷன்ஷிப் பற்றி பேசிய இந்தப்படத்தில் ஏகப்பட்ட ரொமான்ஸ் காட்சிகள் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.