பிக்பாஸ் நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியில் கடந்த 5 வருடங்களுக்கு முன்னர் தொடங்கப்பட்டது. பிரம்மாண்டமான முறையில் தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியின் முதல் சீசனின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து தற்சமயம் 6வது சீசன் வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளது.
இந்த நிலையில், கடந்த அக்டோபர் மாதம் 9ம் தேதி ஆரம்பமான இந்த பிக்பாஸ் ஆறாவது சீசன் கடந்த 22ஆம் தேதி முடிவுக்கு வந்தது. 21 போட்டியாளர்களுடன் ஆரம்பமான இந்த நிகழ்ச்சியில் கடைசியில் இறுதி கட்ட போட்டியாளர்களாக விக்ரமன் சிவின் மற்றும் அசீம் உள்ளிட்ட மூவரும் இருந்தார்கள்.
இந்த 3 போட்டியாளர்களில் வெற்றியாளர் ஒருவர்தான் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், எல்லோரும் நிச்சயமாக விக்கிரமன் தான் இந்த நிகழ்ச்சியில் வெற்றி பெறுவார் என்று நினைத்தார்கள்.ஆனால் போட்டியின் முடிவு வேறு விதமாக இருந்தது. யாரும் எதிர்பாராத விதமாக இந்த சீசனின் வெற்றியாளர் அசீம் என்று அறிவிக்கப்பட்டார்.
ஆனால் பொதுமக்கள் பெரிதும் எதிர்பார்த்த விக்ரமனுக்கு 2வது இடமே கிடைத்தது. இதன் காரணமாக, boycottvijaytv உள்ளிட்ட ஹேஷ்டேக்குகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தது.பொதுமக்கள் பலரும் அசீம் இந்த நிகழ்ச்சியின் வெற்றியாளராக தேர்வு செய்யப்பட்டதற்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வந்த நிலையில், இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளரான கமல்ஹாசனுக்கும் அவர் வெற்றி பெற்றது பிடிக்கவில்லை.
அவர் ஒரு சில காரணங்களை முன்வைத்து தான் வெற்றியாளரை அறிவித்திருப்பார், இந்த புகைப்படம் அதனை வெளிப்படுத்துகிறது என்று ஒரு ரசிகர் தன்னுடைய கருத்தை தெரிவித்து இருக்கிறார்.