fbpx

பிரபல நடிகர் சுந்தர்ராஜனுக்கு இப்படி ஒரு நிலைமையா..? ரூ.20 லட்சம் மோசடி செய்ததாக பரபரப்பு புகார்..!!

கடலூர் மாவட்டம் நெய்வேலியை சேர்ந்தவர் ரங்கதாஸ் (64). பிரபல திரைப்பட இயக்குநர் பாக்யராஜிடம் உதவி வசன கர்த்தாவாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், பிரபல இயக்குநரும் நடிகருமான ஆர்.சுந்தர்ராஜன் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ரங்கதாஸ் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகார் மனுவில், ”நான் கடந்த 2000ஆம் ஆண்டு நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற பிறகு சினிமா இயக்குநர் கே.பாக்யராஜிடம் உதவி வசனகர்த்தாவாக பணியாற்றி வருகிறேன்.

அப்போது இயக்குநரும், நடிகருமான ஆர்.சுந்தர்ராஜன் எனக்கு அறிமுகமானார். பின்னர் இருவரும் நண்பர்களாக பழகி வந்தோம். கடந்த 2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இயக்குநர் சுந்தர்ராஜன் தன்னிடம் வந்து அடமானம் வைத்த என் வீடு மூழ்கும் தருவாயில் உள்ளது. வீடு மீது வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் வீடு கையை விட்டு போய்விடும். ஆகையால் 20 லட்ச ரூபாய் கடனாக வேண்டும் என்று கேட்டார். இதனை நம்பி என் சேமிப்பு தொகையில் இருந்து 20 லட்ச ரூபாயை எடுத்து அவருக்கு கடனாக வழங்கினேன். பின்னர் பணத்தை பெற்றுக் கொண்ட சுந்தர்ராஜன் குறிப்பிட்டது போல் பணத்தை திருப்பி தராமல் ஏமாற்றி வருகிறார். பணத்தை திருப்பி கேட்டால் மிரட்டல் விடுப்பதால் அவர் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தரவேண்டும்” என புகாரில் தெரிவித்துள்ளார்.

இந்த புகாரை அடுத்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதற்கிடையே பதிலுக்கு இயக்குநர் சுந்தர்ராஜனும் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், ”நெய்வேலியை சேர்ந்த ரங்கதாஸிடம் 20 லட்ச ரூபாய் கடனாக பெற்றேன். குறிப்பிட்டு கால அவகாசத்தில் பணத்தை அவருக்கு திருப்பி தர இயலவில்லை. ஆகையால் அதற்குண்டான வட்டியை மாதம் மாதம் தவறாமல் கொடுத்து வருகிறேன். இருப்பினும் அவர் அடிக்கடி வீட்டிற்கு வந்து பணத்தை கேட்டு தொல்லை கொடுத்து மிரட்டுவதால் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. எனவே, ரங்கதாஸ் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கேட்டுக்கொண்டுள்ளார். இருதரப்பினர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Chella

Next Post

ஒயின் ஷாப்பில் ஏற்பட்ட தகராறு…..! மது பாட்டிலால் குத்தி ஒருவர் கொலை திண்டுக்கல் அருகே பரபரப்பு……!

Wed May 17 , 2023
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள தேவநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் உமாராணி(42). இவருக்கு திருமணமாகி 2 மகள்கள் இருக்கின்றனர். கணவர் உயிரிழந்த நிலையில், கோவையில் தங்கி அவர் வேலை பார்த்து வந்தார். இத்தகைய நிலையில், பெயிண்டராக வேலை பார்க்கும் சிதம்பரத்தை சேர்ந்த கணேசன்( 30) என்பவருடன் உமாராணிக்கு பழக்கம் ஏற்பட்டு, இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்ததாக சொல்லப்படுகிறது. கணேசனுக்கும், உமாராணிக்கும் தகராறு ஏற்பட்டு வந்ததால் உமாராணி கோபித்துக் கொண்டு, அவருடைய சொந்த […]

You May Like