ஸ்மார்ட் போன்கள் இல்லாத, சோஷியல் மீடியா இல்லாத 90ஸ் கிட்ஸ்களுக்கு ஒரே எண்டர்டெயின்மென்ட் டிவி மட்டும்தான். அப்போதைய காலகட்டத்தின் டிவி நடிகர்கள், தொகுப்பாளர்கள் ரசிகர்களின் மனதுக்கு நெருக்கமானவர்களாக இருந்தார்கள். டாப் டென் மூவிஸ் சுரேஷ் உள்ளிட்ட சிலர் மட்டுமே தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். மற்ற பலர் மீடியா வெளிச்சத்திலிருந்து காணாமலே போய்விட்டனர். எப்போதாவது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும்போது புகைப்படங்களை வெளியிட்டு அவர்கள் குறித்த நாஸ்டாலஜியாவை ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

அந்த வகையில், 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் தொகுப்பாளரான பெப்சி உமாவின் லேட்டஸ்ட் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. டிவி நடிகை ரேகா என்பவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பெப்சி உமாவுடன் எடுத்துக்கொண்ட போட்டோவை பகிர்ந்து, குழந்தை பருவ கனவு ஒன்று நினைவானது ஆண்களில் அஜித்தையும் பெண்களில் பெப்சி உமாவையும் சந்திக்க வேண்டும் என்பது தின கனவாகவே இருந்தது. அந்தக் கனவு நேற்றைக்கு நிஜமானது. 15 நிமிட உரையாடலில் 5 ஆண்டுகளாகவே அவர் வீட்டுக்கு பக்கத்து வீட்டில் தான் நான் வசித்து வருகிறேன் என்பது தெரிந்தது. இருந்தும் ஒரு முறை கூட அவர் வெளியில் வந்து பார்த்ததே இல்லை. நேற்றைக்கு அதைச் சொன்னவுடன் அவர்கள் சிரித்துக் கொண்டு உண்மைதான் நான் வெளியே வருவதில்லை. வீட்டுக்கு வாருங்கள் என்று அன்போடு அழைத்த அந்த அழகிக்கு என் வாழ்த்துகள்.
உங்கள் கொஞ்சும் குரல்,அழகிய தமிழ், உங்கள் ஆடை, நீங்கள் வைத்திருக்கும் மல்லிகை பூ என உங்களை நேசிக்க ஆயிரம் உண்டு. ஆதலாலேயே பெண் தொகுப்பாளர்களில் நீங்கள் ஒரு சூப்பர் ஸ்டார். அதை எப்போதும் மகிழ்ச்சியோடு பாராட்டுவேன் வாழ்த்துகள் அக்கா” என்று குறிப்பிட்டுள்ளார்.