fbpx

கீர்த்தி ஷெட்டியுடன் பழக நட்சத்திர நடிகரின் மகன் செய்யும் காரியமா இது..? அவரே என்ன சொல்லியிருக்காருன்னு பாருங்க..!!

தென்னிந்திய சினிமாவில் சமீபகாலமாக பல புதுமுக நடிகைகள் அறிமுகமாகி வருகின்றனர். அந்த வகையில், தெலுங்கு சினிமாவில் வெளியாகிய உப்பென்னா திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் கீர்த்தி ஷெட்டி. தெலுங்கில் பல திரைப்படங்களில் நடித்து வந்த இவ,ர் தமிழில் முதன்முறையாக ‘தி வாரியர்’ என்ற திரைப்படத்தின் மூலம் காலடி எடுத்து வைத்துள்ளார். அதுமட்டுமல்லாது பல படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் கீர்த்தி ஷெட்டிக்கு, நட்சத்திர நடிகர் ஒருவரின் மகன் தொடர்ந்து தொல்லை அளித்து வருகிறார் என்ற செய்திகள் சமூக வலைத்தளங்களில் பரவி வந்தன. அதாவது அந்த நபர் செல்ல கூடிய ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் வரும்படி கீர்த்தி ஷெட்டிக்கு தொலைபேசி அழைப்புகள் மூலமாக தொல்லை கொடுத்துள்ளார். அதுமட்டுமல்லாது அந்த நபர் கீர்த்தி செட்டியை விடாமல் பின்தொடர்ந்து உள்ளார். இவ்வாறாக கீர்த்தியுடன் நட்பு கொள்ள அவர் கடுமையாக முயற்சித்து வருகிறார். ஆனால், இதற்கு கீர்த்தி ஷெட்டி சம்மதிக்கவில்லை.

இந்த செய்தியானது சமூக வலைத்தளங்களில் தீயாக பரவியமையைத் தொடர்ந்து, அதற்கு கீர்த்தி ஷெட்டி தற்போது விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் கூறுகையில், “தயவு செய்து கற்பனையாக இதுபோன்று விஷயங்களை புனைய வேண்டாம். தவறான தகவலை பரப்பாமல் நிறுத்தி கொள்ளவும். இது ஓர் அடிப்படையற்ற புரளி என்பதற்காக, இதனை தவிர்த்து விட நினைத்தேன். ஆனால், இந்த புரளி பல மடங்காக வெடித்து, பரவி வருகிறது” என்று தெரிவித்து அதன் மூலமாக முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

Chella

Next Post

ஜிஎஸ்டி கவுன்சிலின் 50வது கூட்டம் இன்று.. வரி குறையுமா??

Tue Jul 11 , 2023
இந்தியாவில் பல ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த மறைமுக வரியை மாற்றிய சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கவுன்சிலின் 50வது கூட்டம் இன்று நடைபெற உள்ளது. ஜிஎஸ்டி வரி விதிப்பில் அறிமுகம் செய்யப்பட்ட நாளில் இருந்து தொடர்ந்து மாற்றம் செய்யப்பட்டு வரும் வேளையில் இந்த ஸ்பெஷலான 50வது கூட்டத்தில் முக்கியமான சில முடிவுகள் எடுக்கப்பட உள்ளது. இதில் முக்கியமாக நீண்ட காலமாக கிடப்பில் இருக்கும் ஆன்லைன் கேமிங் மீதான வரி […]

You May Like