முன்னதாக உலகளவில் ரூ.375.40 கோடிகளுக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக ஆகஸ்ட் 17ஆம் தேதி சன் பிச்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. தொடர்ந்து 2-வது வார இறுதியிலும் ஜெயிலர் திரைப்படம் வசூலைக் குவித்து வந்த நிலையில், விரைவில் ரூ.500 கோடி எட்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், ஜெயிலர் திரைப்படம் 11-வது நாளில் ரூ.500 கோடியை கடந்ததாக கூறப்படுகிறது.
ஏற்கெனவே நடிகர் ரஜினிகாந்தின் 2.0 படம் 500 கோடிகளுக்கு மேல் வசூலித்த நிலையில், ஜெயிலர் திரைப்படம் 500 கோடி வசூலித்த ரஜினியின் இரண்டாவது படமாக உருவெடுத்துள்ளது. இதற்கிடையே, கடந்தாண்டு ரூ.487.50 கோடி வசூலை வாரிக் குவித்து சென்ற பொன்னியின் செல்வன் படத்தின் வசூலை ஜெயிலர் முறியடிக்கும் எனப் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் , அந்த சாதனையையும் ஜெயிலர் தற்போது கடந்துள்ளது.