fbpx

’விக்ரம்’ படத்தின் ஆல் டைம் வசூலை ஆறே நாட்களில் முறியடித்த ’ஜெயிலர்’..? வெளியான லேட்டஸ்ட் அப்டேட்..!!

விக்ரம் படத்தின் ஆல் டைம் வசூலை வெறும் ஆறே நாட்களில் ஜெயிலர் திரைப்படம் முறியடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளாது.

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் கடந்த 10ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 24 ஆண்டுகளுக்கு பின் ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் ரஜினி மற்றும் ரம்யா கிருஷ்ணன் இணைந்து நடித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மோகன்லால், சுனில், சிவராஜ் குமார், ஜாக்கி ஷெராஃப், தமன்னா, யோகிபாபு, விநாயகன் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் நடித்துள்ளனர். ஜெயிலர் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ள நிலையில், சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்நிலையில், கமல்ஹாசனின் பரபரப்பான பிளாக் பஸ்டர் திரைப்படமான விக்ரம் படத்தின் ஆல் டைம் வசூலை வெறும் ஆறே நாட்களில் ஜெயிலர் திரைப்படம் முறியடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளாது. அதன்படி, விக்ரம் படம் மொத்தமாக 410 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. ஆனால், ஜெயிலர் திரைப்படம் வெளியான 6 நாட்களில் உலகம் முழுவதும் 416 கோடி ரூபாய் வசூலித்து சாதனைப் படைத்துள்ளதாக கூறப்படுகிறது.

Chella

Next Post

தம்பதிகளே!… உடலுறவும், தேங்காய் எண்ணெய்யும்.., என்ன நடக்கும் தெரியுமா?… ஆய்வில் தெரியவந்த உண்மை!

Wed Aug 16 , 2023
உடலுறவின் போது தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்தினால் என்ன நடக்கும் என்பதை ஆய்வு முடிவுகளில் தெரியவந்துள்ளது. தேங்காய் எண்ணெய் கிட்டத்தட்ட ஒவ்வொரு வீட்டிலும் பயன்படுத்தப்படுகிறது. முடி மற்றும் சரும ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி, தேங்காய் எண்ணெயை சமையலுக்கும் பயன்படுத்தலாம். தீக்காயங்களை குணப்படுத்தவும், முடியை நீளமாகவும் அடர்த்தியாகவும் மாற்ற இது பல ஆண்டுகளாக பயன்படுத்தப்படுகிறது. ஆனால் உடலுறவின் போது தேங்காய் எண்ணெயை உயவூட்டுவதற்கும் பயன்படுத்தலாம் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். முதுமை, மருந்துகள் அல்லது ஹார்மோன் […]

You May Like