fbpx

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஓடிடியில் வெளியாகிறது ’ஜெயிலர்’..!! எப்போது..? எந்த தளத்தில்..? வெளியான அறிவிப்பு..!!

நடிகர் ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகும் தேதியை அமேசான் பிரைம் நிறுவனம் அறிவித்துள்ளது.

இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. இப்படத்தில் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், மோகன்லால், சுனில், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப், யோகிபாபு உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ள நிலையில், சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இப்படம் ரசிகர்களின் பலத்த வரவேற்பை பெற்ற நிலையில், முதல் வார முடிவில் உலகம் முழுவதும் சுமார் ரூ.375.40 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக சன் பிக்சர்ஸ் அறிவித்தது.
இதுவரை சுமார் 600 கோடிக்கு மேல் ஜெயிலர் படம் வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், ஜெயிலர் படம் இம்மாதம் 7ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியாக இருக்கிறது. அதற்கான போஸ்டர் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. இதனால், ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

Chella

Next Post

”நம்ம கட்சியில சேர்ந்துருங்க”..!! ரஜினியுடன் ஓபிஎஸ் திடீர் சந்திப்பு..!! அரசியல் நிலவரம் குறித்து ஆலோசனை..?

Sat Sep 2 , 2023
சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்தை சுமார் ஒரு மணி நேரம் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம். மரியாதை நிமித்தமான சந்திப்பு என சொல்லப்படும் இந்த சந்திப்பின்போது, தற்போதைய அரசியல் நிலவரம் பல விஷயங்கள் பேசப்பட்டதாக கூறப்படுகிறது. ‘ஜெயிலர்’ பட வெளியீட்டுக்குப் பிறகு நடிகர் ரஜினிகாந்த் படத்தின் வெற்றிக் கொண்டாட்டம், பெங்களூருவில் தான் பணி செய்த இடத்துக்கு விசிட், சொந்த கிராமத்திற்கு சென்று திரும்பியது என […]

You May Like