சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தயாரிப்பில், நெல்சன் இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் ஜெயிலர். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் ரம்யாகிருஷ்ணன், தமன்னா, வசந்த் ரவி, யோகிபாபு, சிவராஜ்குமார், மோகன்லால் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படம் நேற்று வெளியான நிலையில், ரஜினியின் ரசிகர்கள் திருவிழா போல் கொண்டாடி வருகின்றனர். முதல் நாளில் இப்படம் 70 முதல் 80 கோடி வரை வசூல் செய்திருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்திற்கு தொடர்ச்சியாக குவிந்து வரும் பாசிட்டிவ் விமர்சனத்தால் அடுத்தடுத்த நாட்களில் ‘ஜெயிலர்’ படம் மேலும் பல சாதனைகளை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே, சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு உலகம் முழுவதும் கோடிக்கான ரசிகர்கள் உள்ள நிலையில், இலங்கையிலும் ஏராளமான ரசிகர்கள் உண்டு. அந்தவகையில், இலங்கையில் மட்டும் நேற்று இப்படம் ரூ.2 கோடி வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது.