விஜய் டிவி நடத்தி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் தற்பொழுது ஒளிபரப்பாகி வருகிறது. இதில் கமல் தொகுப்பாளராக இருந்து வருகிறார், நடிகர் கமல் 60 வயதை கடந்தும் திரைப்படங்களில் ஓய்வே இல்லாமல் நடித்து வருகிறார்.
ஆனால் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியை பொருத்தவரையில் ஒவ்வொரு சீசனிலும் பங்கேற்கும் போட்டியாளர்கள் தங்களுடைய மனதில் இருக்கும் சுக, துக்கங்களை அவ்வப்போது இந்த வீட்டில் பகிர்ந்து கொண்டுள்ளனர்.அப்படி இதுவரையில் நடைபெற்ற 5 சீசன்களிலும் பங்கேற்ற போட்டியாளர்களின் சுக, துக்கங்கள் அனைத்தையும் இந்த பிக்பாஸ் வீடு பார்த்திருக்கிறது.
அந்த வகையில் இந்த வார பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்ற போட்டியாளர்கள் அனைவரும் தங்களுடைய அப்பா, அம்மாவை பற்றி பேச வேண்டும் என்று பிக்பாஸ் போட்டியில் அறிவிக்கப்பட்டது. இதில் கலந்துகொண்ட போட்டியாளர்கள் அனைவரும் அவர்களுடைய அம்மா, அப்பாவை பற்றி மிகவும் கண்ணீர் மல்க சில விஷயங்களை கூறியிருந்தனர்,
இதில் நடிகர் கமல்ஹாசன் அவர்களும் அவருடைய அப்பா, அம்மாவை பற்றி கண்கலங்கி பேசினார். அவர் பேசியதாவது, எல்லோருக்கும் நம்முடைய அம்மா, அப்பாவை பற்றி அவர்கள் உயிருடன் இருக்கும் போதே அவர்களைப் பற்றி நல்ல விஷயங்களை நம்மால் கூற இயலவில்லை, அவர்களை சந்தோஷப்படுத்த முடியவில்லை, இந்த விஷயத்தில் நானும் சிறு குழந்தையை தான் என்று மிகவும் வருத்தத்துடன் கூறியுள்ளார்.