பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி 76 நாட்களை கடந்துவிட்டது. இதுவரை 11 போட்டியாளர்கள் வெளியேறிவிட்ட நிலையில், இந்த வாரம் யார் வெளியேறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதற்கிடையே, நேற்றைய தினம் போட்டியாளர்களுடன் கலந்துரையாடினார் கமல்ஹாசன். அப்போது ரேங்கிங் டாஸ்க்கில் அசீம் நடந்துகொண்ட விதம் குறித்து பஞ்சாயத்து நடத்தினார். விக்ரமனை டார்க்கெட் செய்த அசீம், அவரிடம் கட்டப்பஞ்சாயத்து செய்யக்கூடாது என பேசியிருந்தார். அதுபற்றி அசீமிடம் விளக்கம் சொல்லுங்க எனக் கேட்டார் கமல்.

அப்போது சக போட்டியாளர்களிடமும் அசீம் குறித்து கேள்வி எழுப்பினார். அதில் பலரும் அசீமின் செயலை கடுமையாக கண்டித்தனர். ஆனாலும், அசீம் வழக்கம் போல சிந்து பாடி கமலுக்கே அல்வா கொடுத்தார். இனிமேல் நான் திருந்திடுவேன் சார், என்னோட அறிவு கண்ண திறந்துட்டீங்க என, கமலுக்கே சாம்பிராணி போட்டு வசியம் செய்தார். இதனால் அசீம் இன்னும் திருந்தவில்லை எனத் தெரிகிறது. முதல் வாரத்தில் இருந்தே பாடிய பாட்டையே திரும்ப திரும்ப பாடி வரும் அசீம், இனிமேலும் திருந்த வாய்ப்பே இல்லை என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், இன்று 77வது தினத்துக்கான முதல் பிக்பாஸ் ப்ரோமோ வெளியாகியுள்ளது. இதில் எவிக்சன் கார்டுடன் என்ட்ரி கொடுக்கும் கமல், வழக்கம் போல ஹவுஸ் மேட்ஸ்களிடம் வாக்கெடுப்பு நடத்துகிறார். தனலட்சுமி, அசீம், மைனா நந்தினி மூவரும் தான் இந்த வாரம் எவிக்சன் பிராசஸின் இறுதிப் பட்டியலில் உள்ளனர். விக்ரமன், ஷிவின் இருவரும் மைனா நந்தினியை சொல்ல, கதிர் தனலட்சுமியை கூறுகிறார். மற்றவர்கள் அசீமை நோக்கி கைக்காட்டுகின்றனர். அதில் அமுதவாணன் அசீம் தான் திரும்ப திரும்ப அழுத்தமாக சொல்லவும், “கேக்குது… கேக்குது… நல்லா கேக்குது.. ஆனா அது எனக்கு நல்லா தெரிஞ்சாலும் இவங்கள எப்பவும் உறுதியா நம்ப முடியாது” என பார்வையாளர்களை நோக்கி கை காட்டுகிறார். இதனால், இந்த வாரமும் அசீம் கிரேட் எஸ்கேப் ஆகிவிடுவார் என்றே தெரிகிறது. ஏற்கனவே தனலட்சுமி தான் இந்த வாரம் எவிக்சன் என்ற தகவல் வைரலாகி வருகிறது. ஒவ்வொரு வாரமும் அசீம் இறுதிப் பட்டியல் வரை வந்துவிட்டு எஸ்கேப் ஆகிவிடுவது, விஜய் டிவி தனது டிஆர்பியை ஏற்றுவதற்காகவா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும், இறுதிவரை அசீமை வைத்தே பிக் பாஸ் ரசிகர்களை எண்டர்டெயின் பண்ண விஜய் டிவி முடிவு செய்துவிட்டதா எனவும் ட்ரோல் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், விக்ரமனுக்கு ஆதரவாக கமல்ஹாசன் ஜால்ரா தட்டுவதாக நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். ’எப்படியும் பிக்பாஸ் டைட்டில் விக்ரமனுக்குதான் கொடுப்பீங்க’ என்றும் ட்ரோல் செய்து வருகின்றனர். அசீமை ரோஸ்ட் செய்வது, விக்ரமனுக்கு சொம்பு தூக்குவதுதான் கமல்ஹாசனின் வேலை என்றும் கலாய்த்து வருகின்றனர்.