80களில் முன்னணி நடிகராக திகழ்ந்து வந்தவர் நடிகர் கமல்ஹாசன். அந்த காலகட்டத்தில் ரஜினி மற்றும் கமல் உள்ளிட்டோரிக்கிடையே திரைப்படத்தில் நடிப்பதில் மிகப்பெரிய போட்டி நிலவும். இருவரும் அந்த காலகட்டத்தில் தமிழ் திரை துறையில் கொடி கட்டி பறந்த ஜாம்பவான்கள்.
அதே பரபரப்பு விறுவிறுப்புடனும் தற்போதும் இந்த இரு நடிகர்களும் திகழ்ந்து வருகிறார்கள் என்று சொன்னால் அது மிகையாகாது.
ஆனால் சூப்பர் ஸ்டார் ரஜினியை பொறுத்தவரையில் தான் அரசியலுக்கு வருவதாக வெகுகாலமாக அவர் தெரிவித்து வந்த நிலையில், சில வருடங்களுக்கு முன்னர் அவர் திடீரென்று தான் இனி அரசியலுக்கு வரவே போவதில்லை என்று தன்னுடைய முடிவை அறிவித்தார்.
ஆனால் கமல்ஹாசனும் மக்கள் நீதி மையம் என்ற ஒரு கட்சியை தோற்றுவித்து அதனை நிர்வகித்து வருகிறார்.
இந்த நிலையில் தான் தற்சமயம் இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், கமல்ஹாசன் தன்னுடைய அடுத்தடுத்த திரைப்படத்தின் அப்டேட்டுகளை தெரிவித்து வருகிறார். அண்மையில் கமல்ஹாசனின் 234வது திரைப்படத்தை மணிரத்தினம் இயக்க உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது. இதில் ரெட் ஜெயண்ட்டுடன் ஒன்றிணைந்து மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமால் பிலிம்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
துணிவு திரைப்படத்தின் இயக்குனர் எச் வினோத் கமல்ஹாசனின் 233 வது திரைப்படத்தை இயக்க உள்ளார் என்று தகவல் வெளியானது. இதனை அடுத்து வெற்றிமாறன் மற்றும் பா.ரஞ்சித் உள்ளிட்ட இயக்குனர்களின் கதைகளுக்கு இசைவு தெரிவித்து இருக்கின்றார் கமல் என்றும் கூறப்படுகிறது.
சமீபத்தில் கமல்ஹாசன் நடித்த வெளியான விக்ரம் திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அந்த திரைப்படத்திற்கு முன்பாகவே கமல் மாலிக் என்ற திரைப்படத்தில் இயக்குனர் மகேஷ் நாராயணனுடன் இணைய உள்ளார் என்று தகவல் கிடைத்தது.
அந்த திரைப்படத்தில் 1992 ஆம் ஆண்டில் வெளியான தேவர் மகன் திரைப்படத்தின் தொடர்ச்சியாக கதை அமைந்திருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் நேற்றைய தினம் தேவர் மகன் 2 திரைப்படம் நிறுத்தப்பட்டதாக செய்திகள் வெளியான நிலையில், தற்போது மகேஷ் நாராயணன் இது தொடர்பாக பேட்டி அளித்துள்ளார்.
அவர் தெரிவித்ததாவது, இந்த திரைப்படம் கமல் சார் எழுதிய கதை தற்போது அவர் பிசியாக மற்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். அதனை முடித்த பிறகு எங்களுடைய கூட்டணி ஆரம்பமாகும். நான் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தில் வெகு காலமாக அங்கம் வகித்துள்ளேன் என்று கூறியுள்ளார்.