1950 களில் சினிமா என்ற ஒரு துறை இந்தியாவில் துளிர்விட தொடங்கிய காலகட்டத்தில் இருந்து இந்திய சினிமாவை ரசித்து வருபவர்களுக்கு நன்றாக தெரியும் அப்போது தமிழ் சினிமா துறையின் இருபெரும் நட்சத்திரங்களாக திகழ்ந்து வந்தபவர்கள் தான் சிவாஜி கணேசனும், எம்ஜிஆரும் என்று.
நடிப்புத் துறையில் இருவரும் சக்கரவர்த்திகளாக வைத்து திகழ்ந்து வந்த இவர்கள் இருவரும் வெவ்வேறு பாதைகளுக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. மக்கள் திலகம் என்று பெயரிடத்த எம் ஜி ஆர் ஒரு கட்டத்திற்கு மேல் நடிப்புக்கு முழுக்கு போட்டு அரசியலுக்குள் காலடி எடுத்து வைத்தார்.
கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்று சொல்வதைப் போல திரை துறையில் பல வெற்றிகளை பெற்றது போலவே அரசியலிலும் 10 வருட காலம் அசைக்க முடியாத மாபெரும் சக்தியாக திகழ்ந்தவர் தான் எம்ஜிஆர்.
ஆனால் சிவாஜி கணேசனை பொருத்தவரையில் திரை துறையை எந்த விதத்திலும் விட்டுக் கொடுக்காமல் கெட்டியாக பிடித்துக் கொண்டார். அவருடைய சினிமாவை விரும்பும் நபர்கள் அவரைப் பற்றி அறியாமல் இதுவரையில் இருந்திருக்க மாட்டார்கள். மேடை நாடகத்தில் அதீத ஆர்வம் கொண்ட சிவாஜி கணேசன், நடித்த முதல் நாடகம் ராமாயணம் தான். இதில் சீதை வேடத்தில் சிவாஜி கணேசன் நடித்திருந்தார்.
அதன்பிறகு பல்வேறு நாடகங்களில் நடித்துள்ள சிவாஜி கணேசன் சென்ற 1952 ஆம் வருடம் பராசக்தி என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் முதல் முறையாக காலடி எடுத்து வைத்தார் அதன் பிறகு பாசமலர், கர்ணன், தில்லானா மோகனாம்பாள், வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன், மனோகரா உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்கள் இவருடைய நடிப்புத் திறனை அச்சு அசலாக காட்டியது.
சில வருடங்களுக்கு முன்னர் சிவாஜி நடித்து வெளியான கர்ணன் திரைப்படம் சுமார் 48 வருடங்களுக்குப் பிறகு டிஜிட்டலாக திரையரங்குகளில் மறு வெளியீடு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களுக்கு ஈடு கொடுத்து தமிழ் திரை உலகில் நடிப்பு சக்கரவர்த்தியாக திகழ்ந்து வந்த இவர், சென்ற 1952 ஆம் வருடம் கமலா என்ற நபரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு 2 மகன்கள் மற்றும் 2 மகள்கள் இருக்கிறார்கள் இதோ சிவாஜி கணேசன் தன்னுடைய மனைவியுடன் எடுத்துக்கொண்ட இதுவரையில் மக்கள் பார்த்திராத ஒரு அரிய புகைப்படம்.