fbpx

லியோ அப்டேட்..!! கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் விஜய்..!! மகளாக நடிக்கும் பிக்பாஸ் பிரபலம்..!!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா, பிரியா ஆனந்த், சஞ்சய் தத், அர்ஜுன், கவுதம் மேனன், மிஷ்கின் உள்ளிட்ட பலர் நடித்து வரும் லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் நடந்து வருகிறது. இப்படத்தில் விஜய் 50 வயது மதிக்கத்தக்க ஒரு கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடிப்பதாக ஏற்கனவே வெளியாகிய தகவல் தற்போது உறுதியாகி உள்ளது.

அதன்படி இந்த படத்தில் விஜய்-த்ரிஷா ஆகிய இருவரும் கணவன்-மனைவியாக நடிக்கும் நிலையில், அவர்களின் மகளாக பிக்பாஸ் சீசன்-6 நிகழ்ச்சியில் பங்கேற்ற இலங்கை தமிழ் பெண்ணான ஜனனி நடிக்கிறார். இது தொடர்பான தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. காஷ்மீரை தொடர்ந்து அடுத்தக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெறயிருக்கிறது. இந்நிலையில், விஜய்-த்ரிஷாவுடன் இணைந்து ஜனனி நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Chella

Next Post

கணவர்கள் எச்சரித்தும் கைவிடப்படாத முறை தவறிய உறவால் பறிபோன உயிர்…..!

Thu Mar 2 , 2023
முறை தவறிய உறவில் ஈடுபடுபவர்கள் பலர் அந்த உறவில் கிடைக்கும் இன்பத்தில் இருந்து வெளிவர முடியாமல் கடைசிவரையில் அந்த உறவை கைவிடாமல் இருந்து வருவதால் பல்வேறு சிக்கல்களை சந்திக்கிறார்கள்.ஆனால் அந்த முறையை தவறிய உறவு அவர்களுடைய உயிருக்கு எமனாய் வந்தால் என்ன நடக்கும் தெரியுமா? நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அருகே இருக்கின்ற போடிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் செல்வகுமார், இவருடைய மகன் சசிகுமார் இவர் நாமக்கல் பகுதியில் இருக்கின்ற ஒரு தனியார் நிதி […]

You May Like