மகேஷ் பாபுவின் மகள் சித்தாரா சமீபகாலமாக செய்திகளில் இடம்பிடித்துள்ளார். தற்போது 11 வயதாகும் இவர், சமீபத்தில் நகை விளம்பரம் ஒன்றில் தோன்றியிருந்தார். இதற்காக அவருக்கு ஒரு பெரிய தொகை கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அந்த விளம்பரத்தில் நடித்ததற்காக சித்தாராவுக்கு ரூ.1 கோடி சம்பளம் வழங்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், இதுகுறித்து இன்னும் அதிகாரப்பூர்வமான தகவல் எதுவும் வெளியாகவில்லை. சித்தாராவின் முதல் விளம்பரம் டைம்ஸ் சதுக்கத்தில் இடம்பெற்றது.
இதையடுத்து அவரின் தந்தை மகேஷ் பாபு மற்றும் தாய் நம்ரதா ஷிரோத்கர் ஆகியோர் தங்கள் மகளுக்கு இந்த அங்கீகாரம் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைந்தனர். 11 வயதில் 1 கோடி ரூபாய் சம்பளம் வாங்கிய சித்தாராவை கண்டு பலரும் வியக்கின்றனர். நட்சத்திரக் குழந்தை என்றாலும் கூட ஒரு சிலர் மட்டுமே இவ்வளவு பெரிய டீலை சிறு வயதிலேயே பெற்றிருக்கிறார்கள். டைம்ஸ் சதுக்கத்தில் அந்த விளம்பரம் இடம்பெற்றபோது, அது குறித்து இன்ஸ்டகிராமில் தனது உணர்வுகளை வெளிப்படுத்தியிருந்தார் சித்தாரா. “TIMESQUAREEEE!! ஓ மை காட் என படபடத்தேன், அழுதேன், கத்தினேன், என்னால் இதைவிட மகிழ்ச்சியாக இருக்க முடியாது. @pmj_jewels நீங்கள் இல்லாமல் இதை செய்திருக்க முடியாது” என தெரிவித்திருந்தார்.
சித்தாரா மட்டுமல்ல, நம்ரதாவும் தனது உணர்வுகளை பகிர்ந்து கொண்டார். டைம்ஸ் சதுக்கத்தில் இடம் பெற்ற சித்தாராவின் விளம்பரப் பதிவைப் பகிர்ந்த அவர், “டைம்ஸ் சதுக்கத்தில் அறிமுகமானவர் யார் என்று பாருங்கள்! நான் உன்னைப் பற்றி எவ்வளவு மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருக்கிறேன் என்பதை வார்த்தைகளால் சொல்ல முடியாது! உன் கனவுகள் நனவாகும். நம்ப முடியாத உணர்வு. பிரகாசித்துக்கொண்டே இரு என் சூப்பர் ஸ்டார்!” எனக் குறிப்பிட்டிருந்தார்.
மகேஷ் பாபுவும் தனது மகள் சித்தாராவின் சாதனைகள் குறித்த செய்திகளை தனது ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டார். அதில், “டைம்ஸ் சதுக்கத்தை ஒளிரச் செய்தவள்!! அதனால் மிகவும் பெருமையடைகிறேன், தொடர்ந்து பிரகாசிக்கவும்!!” என்று குறிப்பிட்டிருந்தார்.