fbpx

சன் டிவி சீரியலில் இருந்து விலகும் முக்கிய நடிகை..?? அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் தொடரில் முதன்மை பாத்திரத்தில் நடித்து வரும் பிரியதர்ஷினி அந்த தொடரிலிருந்து விலகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சன் டிவியில் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்ற தொடர்களில் எதிர்நீச்சலும் ஒன்று. ஒளிபரப்பான சில மாதங்களிலேயே மக்கள் கொண்டாடும் அளவுக்கு அதிகபடியான ரசிகர் கூட்டம் அந்த தொடருக்கு உண்டு. இளைய தலைமுறையினர் பலரும் மீம்ஸ்களாக எதிர்நீச்சல் மாமனார் கதாபாத்திரத்தை பகிரத் தொடங்கினர். அந்த அளவுக்கு வயது வித்தியாசமின்றி அனைத்து தரப்பு மக்கள் மத்தியில் எதிர்நீச்சல் தொடர் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த தொடரில் முதன்மை பாத்திரத்தில் நடித்துவரும் பிரியதர்ஷினி, இந்த தொடரில் இருந்து விலக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சன் டிவி சீரியலில் இருந்து விலகும் முக்கிய நடிகை..?? அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!

இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நம்ம வீட்டு பிள்ளை என்ற தொடரிலும் நடித்து வருகிறார். எனினும், பிரியதர்ஷினி தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. எனினும், சமூக வலைதளங்களில் பரவும் இந்த தகவலால் ரசிகர்கள் பலர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். எதிர்நீச்சல் தொடரில் இருந்து பிரியதர்ஷினி விலக வேண்டாம் என்றும், அவர் விலகினால், அவருக்கு இணையாக வேறு யாரையும் பொருத்திப்பார்க்க முடியாது என்றும் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். எதிர்நீச்சல் தொடரை திருச்செல்வம் இயக்குகிறார். ஸ்ரீவித்யா வசனம் எழுதுகிறார்.

Chella

Next Post

ஒரே நாளில் ரூ.304 குறைந்த தங்கம் விலை..! மகிழ்ச்சியில் நகை பிரியர்கள்..

Fri Jan 6 , 2023
எந்த அணிகலன்கள் அணிந்தாலும் தங்க அணிகலன்களுக்கு எப்பொழுதும் மவுசு அதிகம் தான். மக்களும் தங்கத்தில் அதிகளவு முதலீடு செய்கின்றனர். தங்கத்தின் விலையில் அவ்வப்போது ஏற்ற இறக்கம் காணப்படுவதுண்டு. அந்த வகையில், இன்று நகை பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி தான் காத்திருக்கிறது. சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு 38 ரூபாய் சரிந்து, 5,190 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு 304 ரூபாய் சரிந்து 41,520 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. […]
gold

You May Like