fbpx

16 வயசுல திருமணம்..!! பாவம் ஒன்னுமே தெரியல..!! 2 முறை விவாகரத்து..!! ’மாவீரன்’ பட நடிகையின் வாழ்க்கையில் இப்படி ஒரு சோகமா..?

1980-களில் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக கொடிகட்டிப் பறந்தவர் தான் சரிதா. குறுகிய காலத்திலேயே சினிமாவில் இருந்து விலகிய சரிதா, தற்போது சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தின் மூலம் கம்பேக் கொடுத்துள்ளார். சினிமாவில் சக்சஸ்புல் நாயகியாக வலம் வந்த சரிதாவின் சொந்த வாழ்க்கை பல்வேறு சோகங்களும், மர்மங்களும் நிறைந்ததாக உள்ளது. அதைப்பற்றி பத்திரிகையாளர் செய்யாறு பாலு பேட்டி ஒன்றி கூறியிருக்கிறார்.

1960-ல் குண்டூர் அருகே ஒரு சாதாரண கிராமத்தில் பிறந்தவர் தான் சரிதா. இவர் பள்ளிப்படிப்பை முடிக்கும் முன்னரே இவருக்கு சினிமா வாய்ப்பு தேடி வந்தது. இவர் முதல் படமே கமல்ஹாசனுடன் அதுவும் கே.பாலசந்தர் இயக்கத்தில் தான் ஹீரோயினாக அறிமுகமானார். அப்போது அவருக்கு வயது 15. சரிதா நடித்த முதல் படமான மரோ சரித்ரா 1978இல் ரிலீசாகி ஹிட் அடித்தது. பின்னர், அதே ஆண்டில் தமிழிலும் ரஜினியின் தப்பு தாளங்கள் படம் மூலம் என்ட்ரி கொடுத்த சரிதா, தன்னுடைய நடிப்பு திறமையால் பாராட்டுக்களை பெற்றார்.

இப்படி 2 படங்கள் ஹிட் கொடுத்ததும் நடிகை சரிதா, 16 வயதிலேயே வெங்கட சுப்பையா என்கிற தெலுங்கு நடிகரை திருமணம் செய்துகொண்டார். அறியாத வயதில் நடந்த அந்த திருமணம் ஆறு மாதத்திலேயே முடிவுக்கு வருகிறது. திருமணத்துக்கு பின் நடிக்கக் கூடாது என கண்டிஷன் போட்டதால் பிரச்சனை ஏற்பட்டு அவரை பிரிந்துவிட்டார் சரிதா. பின்னர், சினிமாவில் முழு கவனத்தை செலுத்திய சரிதா, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் நடித்து டாப் ஹீரோயினாக கொடிகட்டிப் பறந்தார்.

பாலசந்தரையே வியக்க வைத்த நடிகை தான் சரிதா. குறிப்பாக அவர் இயக்கிய தண்ணீர் தண்ணீர் என்கிற படத்தில் தலையிலும், இடுப்பிலும் குடத்தை வைத்துக் கொண்டு மற்றொரு கையில் குழந்தையுடன் வரும்படி ஒரு காட்சி இருந்ததாம். இந்த சீனை எப்படி எடுப்பது என பாலச்சந்தரே குழம்பிப் போய் இருந்த வேளையில், சரிதா அசால்டாகா அந்த சீனை நடித்து பாலசந்தருக்கே ஷாக் கொடுத்தாராம். இப்படி சரிதாவின் நடிப்புத் திறமையை பார்த்து டாப் ஹீரோக்களே பயந்துபோன காலமாக அது இருந்துள்ளது.

இவர், ஒரு கட்டத்தில் மலையாள நடிகர் முகேஷுடன் தொடர்ந்து சில படங்களில் பணியாற்றி வந்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டு கடந்த 1988இல் அவரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார் சரிதா. முகேஷை திருமணம் செய்துகொண்ட பின்னர் சினிமாவில் இருந்து விலகிய சரிதா, பின்னர் விஜய்யின் பிரெண்ட்ஸ் உள்பட சில படங்களில் மட்டும் அவ்வப்போது தலைகாட்டி வந்தார். இதையடுத்து, கடந்த 2011இல் முகேஷ் உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விவாகரத்து செய்து பிரிந்துவிட்டார் சரிதா. அதன்பின்னர் சினிமா பக்கம் தலைகாட்டாமலே இருந்து வந்த அவர், தற்போது மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு அம்மாவாக நடித்து தரமான கம்பேக் கொடுத்துள்ளார். இனி அவர் அம்மா ரோல்களை ஆக்கிரமிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது.

Chella

Next Post

ஏடிஎம்மில் உங்களுக்கு பணம் எடுக்க தெரியாதா..? வங்கிக் கணக்கில் இருந்து பணம் மாயமாகும் அபாயம்..!! உஷாரா இருங்க..!!

Mon Jul 17 , 2023
திண்டிவனத்தில் ஏடிஎம் கார்டை மாற்றி கொடுத்து நூதன முறையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்த நிலையில், அவர்களிடம் இருந்து ரூ.48,000 ரொக்கம் மற்றும் 81 ஏடிஎம் கார்டுகளை பறிமுதல் செய்தனர். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம், வெள்ளிமேடு பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஏடிஎம் மையங்களை குறிவைத்து, ஏடிஎம்மில் பணம் எடுக்கத் தெரியாத நபர்களிடம் பணம் எடுத்து தருவதாக கூறி, வேறு ஏடிஎம் கார்டை மாற்றி […]

You May Like