fbpx

’கல்யாணம் ஆகி ரெண்டே மாசத்துல ’!!  குட்நியூஸ் சொன்ன மகாலட்சுமி-ரவீந்தர்

வி.ஜே.வாக அறிமுகம் ஆகி சீரியல்களில் நடித்து பிரபலமானவர் மகாலட்சுமி. இவர் தயாரிப்பாளர் ரவீந்தரை காதலித்து திருமணம் செய்து கொண்ட இரண்டே மாதத்தில் குட் நியூசை மகிழ்ச்சியாக பகிர்ந்துள்ளார்.

மகாலட்சுமிக்கும் – ரவீந்தருக்கும் கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில்தான் திருமணம் நடந்தது. முழுமையாக இரண்டு மாதங்கள் முடிந்திருக்கும். திருமணம் ஆன முதல் நாளை இஸ்டாகிராமில் புகைப்படத்தை வெளியிட்டு அதிகாரப்பூர்வ அறிவிப்பை இவர்கள் வெளியிட்டனர். இதையடுத்து இவர்கள் ஏராளமான விமர்சனங்களை சந்திக்க நேரிட்டது. ஏன் இவரைப்போய் திருமணம் செய்த கொண்டார்? என்பது போல விமர்சனங்கள் வந்தன. சிலர் பணத்திற்காகத்தான் இவரை திருமணம் செய்து கொண்டார் என்பதை போன்றெல்லாம் பேசி வந்தனர்.

இதற்கெல்லாம் பதிலடி கொடுக்கும் விதமாக தொடர்ந்து பேட்டிகளை அளித்துவந்தனர். தங்கள் காதலையும் வெளிப்படுத்தினர். இதையடுத்து ட்ரெண்டிங் ஜோடியாக மாறினர். தற்போது திருமணமாகி 2 மாதங்கள் முழுமையாக முடிந்திருககும் நிலையில் இருவரும் ஒரு குட் நியூஸை பகிர்ந்துள்ளனர். இருவரும் சேர்ந்து ஒரு கார் ஒன்றை வாங்கியுள்ளனர். அதைத்தான் மகிழ்ச்சியாக இருவரும் இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளனர். இந்த ஜோடி புதியதாக வாங்கிய சொகுசு காரின் விலை ரூ.37 லட்சத்துக்கும் மேல் இருக்கும் என கூறப்படுகின்றது.

https://www.instagram.com/reel/CkQrMeKDyLo/?utm_source=ig_web_copy_link

கார் வாங்கியபோது எடுத்துக் கொண்ட வீடியோவை பதிவிட்டு ரவீந்தர் ஒரு பதிவை குறிப்பிட்டுள்ளார். அதில் ’’ வாழ்க்கை முழுவதும் நாம் நேசிக்கும் மாதிரி ஒரு நபர் கிடைப்பது ரொம்ப கஷ்டம் . அப்படி நேசிக்கின்ற நபர் நமக்கு பொண்டாட்டியா வந்தா … பெரிய அதிர்ஷ்டம. அப்படி கிடைத்த பொண்டாட்டியை கூட்டிக்கிட்டு ஊர் சுத்த சொர்க்கம் மாதிரி ஒரு கார் கிடச்சா ’ என பதிவிட்டுள்ளார். இதையடுத்து இருவருக்கும் வாழ்த்துக்கள் குவித்து வருகின்றது.

Next Post

சமூக ஊடகங்கள் தீவிரவாதிகளுக்கு முக்கியமான கருவி … வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சு….

Sat Oct 29 , 2022
தீவிரவாதிகள் தொழில்நுட்பத்தை முக்கிய கருவியா பயன்படுத்தி வருகின்றனர். அதிலும் சமூக ஊடகங்கள் தீவிரவாதிகளுக்கு முக்கியமான கருவியாக உள்ளது என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். டெல்லியில் யு.என்.சி.-ன். பயங்கரவாத எதிர்ப்புக் குழு சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சகங்ர் கூறுகையில் தீவிரவாதிகள் ’ தொழில்நுட்பம் , பணம் ,சுதந்திரத்தை கெடுக்க ஒரு சமூகத்தில் சுதந்திரத்தை தாக்க , சகிப்புத்தன்மை, முன்னேற்றத்தை தடுத்தல் ’ போன்றவற்றை பயன்படுத்துகின்றனர். […]
”நாட்டில் மக்கள் தொகையை கட்டுப்படுத்தினால்”..! வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் எச்சரிக்கை..!

You May Like