fbpx

போட்டியாளரின் மோசமான செயலால் பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய மோகன்லால்..!! பெரும் பரபரப்பு

ஹிந்தியில் பிக்பிரதர் என்கிற நிகழ்ச்சியை அடிப்படையாகக் கொண்டு, துவங்கப்பட்டது தான் பிக்பாஸ் நிகழ்ச்சி. இந்தியில் 15 சீசன்களை வெற்றிகரமாக கடந்த இந்நிகழ்ச்சி, கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு தான் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், போன்ற மொழிகளில் இந்த நிகழ்ச்சி துவங்கப்பட்டது. அந்த வகையில் சமீபத்தில் நடந்து முடிந்த, தமிழ் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் அசீம் டைட்டிலை வென்றார். இது கடும் விமர்சனங்களுக்கு ஆளானது. இது ஒரு புறம் இருக்க, மலையாளத்தில் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி, கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் துவங்கியது. மிகவும் பரபரப்பாக இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வரும் நிலையில், ஆரம்பத்திலேயே பல பிரச்சனைகள், சண்டை சச்சரவுகள் என களைகட்ட துவங்கியுள்ளது.

இந்த வாரம் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியை, ஈஸ்டர் வாழ்த்துக்களோடு மிகவும் உற்சாகமாக தொடங்கினார் மோகன்லால். அதே போல் போட்டியாளர்களை காண ராஜஸ்தானில் இருந்து, பல மணிநேரம் ட்ராவல் செய்து வந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். ஆனால் போட்டியாளர் ஒருவர் மோகன் லாலையே அவமானப்படுத்துவது போல் நடந்து கொண்டது தான் பரபரப்பை ஏற்படுத்தியது. அகில் மாறார் என்கிற போட்டியாளர், முதல் தன்னுடைய சக போட்டியாளர்களான ஏஞ்சலினா மற்றும் சாகர் ஆகியோரை மோசமாக பேசியதற்காக மன்னிப்பு கேட்க சொன்னார் மோகன் லால். அவர் கூறியபடி அகில் மன்னிப்பு கேட்டார். பின்னர் அகில் கையில் இருந்த கேப்டன் பேண்ட்டை சாகரிடம் கொடுக்க சொன்ன போது, அந்த பேண்டை கழட்டி கையில் கொடுக்காமல் தூக்கி வீசினார்.

அகிலின் இந்த மோசமான செயலால் கடுப்பான, மோகன் லால் பல மையில் தூரம் போட்டியாளர்களுக்காக நான் வந்த போதிலும், தன்னை அவமதிப்பது போல் அகில் நடந்து கொண்டதால் லைவ்வை நிறுத்த கூறியது மட்டுமின்றி, நிகழ்ச்சியை விட்டும் வெளியேற துணிந்தார். பின்னர் ஒரு வழியாக அவரை சமாதானம் செய்தனர் பிக்பாஸ் குழுவினர். மேலும் இது போன்ற மோசமான செயல்களில் ஈடுபட கூடாது என பிக்பாஸ் அழைத்து அகிலை கண்டித்ததாகவும் கூறப்படுகிறது. இதன் பின்னரே மீண்டும் நிகழ்ச்சியை நடத்தினார் மோகன் லால். இந்த சம்பவம் மலையாள பிக்பாஸ் ரசிகர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Chella

Next Post

அடப்பாவிங்களா எலிக்கெல்லாமா போஸ்ட்மார்ட்டம் பண்ணுவீங்க……? வழக்கு தொடர்ந்த விலங்குகள் நல ஆர்வலர்…..!

Wed Apr 12 , 2023
உத்தரப்பிரதேச மாநிலம் பரேலி மாவட்டம் பதாயு நகரை சேர்ந்தவர் மனோஜ் குமார் (30) மண்பாண்டம் செய்து வரும் இவர், சென்ற வருடம் நவம்பர் மாதத்தில் ஒரு எளியின்பாலில் கல்லை கட்டி அதனை சாக்கடையில் தூக்கி போட்டார். கல்லின் கணம் அதிகமாக இருந்ததால் எலி மேலே வர இயலாமல் தண்ணீரில் மூழ்கி துடி துடித்து உயிரிழந்தது. ஆனால் அந்த இறந்து போன எலியை விகேந்திர ஷர்மா என்ற விலங்குகள் நல ஆர்வலர் […]

You May Like