fbpx

திரைப்பட நடிகை தற்கொலை வழக்கு..! காணாமல்போன ஐபோன் மீட்பு..! சிக்கிய முக்கிய ஆதாரங்கள்?

‘வாய்தா’ திரைப்பட நடிகை பவுலின் என்கிற தீபாவின் காணாமல்போன ஐபோன் மீட்கப்பட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமை அன்று ‘வாய்தா’ திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த நடிகை பவுலின் ஜெசிகா என்கிற தீபா, விருகம்பாக்கம் மல்லிகை அவென்யூவில் உள்ள தன்னுடைய வீட்டில் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இந்தச் சம்பவம் திரையுலகினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், தீபா தற்கொலை செய்துகொண்டபோது முதல் ஆளாக வந்து கதவை உடைத்துப் பார்த்த பிரபாகரன் என்பவரிடம் இருந்து தற்போது ஐபோன் மீட்கப்பட்டுள்ளது.

திரைப்பட நடிகை தற்கொலை வழக்கு..! காணாமல்போன ஐபோன் மீட்பு..! சிக்கிய முக்கிய ஆதாரங்கள்?

நடிகை தீபா பயன்படுத்திய 3 செல்ஃபோன்கள், ஒரு டேப் ஆகியவை மீட்கப்பட்டுள்ளதாக கோயம்பேடு போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். மீட்கப்பட்ட ஐபோனில் தகவல்களோ அல்லது புகைப்படம், வீடியோக்கள் எதுவும் டெலிட் செய்யப்பட்டிருக்கிறதா? என்பதை ஆய்வு செய்வதற்காக தடயவியல் துறையின் ஆய்வுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளனர். நடிகை தீபா தற்கொலை விவகாரம் தொடர்பாக பிரபாகரனிடம் கோயம்பேடு போலீசார் கிட்டத்தட்ட 3 மணி நேரத்துக்கு மேலாக விசாரணை நடத்தி முடித்துள்ளனர். விசாரணையில், காதலன் சிராஜுதீன் வாங்கி கொடுத்த ஐபோன் என்பதால் அதை தாம் எடுத்து வந்ததாக விசாரணையில் தெரிவித்திருக்கிறார்.

திரைப்பட நடிகை தற்கொலை வழக்கு..! காணாமல்போன ஐபோன் மீட்பு..! சிக்கிய முக்கிய ஆதாரங்கள்?

தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக சிராஜுதனிடம், தீபா வாக்குவாதம் செய்ததாகவும், அதனைத் தொடர்ந்து சிராஜுதீன் தம்மை உடனடியாக தீபா வீட்டுக்கு சென்று பார்க்குமாறும் கூறியதாக போலீஸ் விசாரணையில் தெரிவித்துள்ளார். கைப்பற்றப்பட்டுள்ள 3 செல்போன்கள் மற்றும் டேப்பில் உள்ள விவரங்கள் குறித்தும், அதன் அடிப்படையில் காதலன் சிராஜுதீனிடம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், தீபா தற்கொலை செய்து கொண்ட வீட்டிலிருந்து சில நகைகளும் காணாமல் போனதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Chella

Next Post

அதிமுக பொதுச்செயலாளர் பதவி..!! போட்டியின்றி தேர்வாகிறார் எடப்பாடி பழனிசாமி..!!

Fri Sep 23 , 2022
அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி போட்டியின்றி தேர்வாகிறார். அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் எடப்பாடி பழனிசாமி தரப்பின் கை ஓங்கியது. பொதுக்குழு உறுப்பினர்களில் 95% பேர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக இருக்கிறார்கள். அதன் அடிப்படையில் கடந்த ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட்டு கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். அன்றைய கூட்டத்திலேயே அடுத்த 3 […]
செம ’ட்விஸ்ட்’ வைத்த தேர்தல் ஆணையம்..!! அதிமுக இனி எடப்பாடி கையில்..!! ஓபிஎஸ் கதை அவ்ளோதானா..?

You May Like