fbpx

’என்னுடைய குழந்தை பாட்டின்னு தான் கூப்பிடும்’..!! நடிகை சுகன்யா வாழ்க்கையில் இப்படி ஒரு சோகமா..?

இயக்குனர் பாரதிராஜா, தன்னுடைய புது நெல்லு புது நாத்து படம் மூலம் கடந்த 1991ஆம் ஆண்டு அறிமுகப்படுத்திய நடிகை தான் சுகன்யா. திறமையான நடிப்பால் கோலிவுட்டில் அசுர வளர்ச்சி கண்ட இவர், குறுகிய காலத்திலேயே பிளாக்பஸ்டர் ஹிட் படங்களில் நடித்து பிரபலமானார். இவருக்கு கடந்த 2002இல் ஸ்ரீதரன் என்பவருடன் திருமணம் நடந்தது. சுகன்யாவின் கணவர் அமெரிக்க குடியுரிமை சேர்ந்தவர் என்பதால், இவர்களது திருமணம் அமெரிக்காவில் நடைபெற்றது. திருமணத்துக்கு பின்னர் கணவருடன் அமெரிக்காவிலேயே செட்டில் ஆனார் சுகன்யா.

ஆனால், இவர்களது திருமண வாழ்க்கை ஓராண்டு மட்டுமே நீடித்தது. கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விவாகரத்து செய்தார் சுகன்யா. பின்னர் சினிமாவில் நடிப்பதையும் குறைத்துக் கொண்டார். விவாகரத்துக்கு பின்னர் 20 ஆண்டுகளாக சிங்கிளாகவே வாழ்ந்து வரும் நடிகை சுகன்யாவுக்கு, தற்போது 50 வயது ஆகிறது. இந்நிலையில், நடிகர் சித்ரா லட்சுமணனின் யூடியூப் சேனலுக்கு அண்மையில் பேட்டி ஒன்றை அளித்திருந்தார் சுகன்யா.

அதில், மறுமணம் செய்துகொள்ளும் எண்ணம் இருக்கிறதா? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், இதுவரை அப்படி ஒரு எண்ணம் எனக்கில்லை. எனக்கு இப்போ 50 வயசு ஆகுது. இனி கல்யாணம், குழந்தைனு வந்தா, அந்த குழந்தை என்னை அம்மானு கூப்பிடுமா இல்ல பாட்டினு கூப்பிடுமானு நானே யோசிப்பேன். நான் மறுமணம் வேண்டும்னு சொல்லல, வேண்டாம்னும் சொல்லல என எஸ்.ஜே.சூர்யா ஸ்டைலில் மழுப்பலாக பதிலளித்துள்ளார். அதுமட்டுமின்றி முதல் கணவருடன் நீதிமன்றத்தில் விவாகரத்து கிடைக்க ரொம்ப வருடங்கள் ஆனதாகவும் தெரிவித்துள்ளார்.

Chella

Next Post

டிஎன்பிஎஸ்சி தலைவர் பதவி..!! அரசின் பரிந்துரையை நிறுத்தி வைத்த ஆளுநர் ஆர்.என்.ரவி..? வெளியான அதிர்ச்சி தகவல்..!!

Mon Aug 21 , 2023
டிஎன்பிஎஸ்சி தலைவர் உள்ளிட்ட 10 உறுப்பினர்கள் பதவிகளுக்கான பெயர்களை தமிழ்நாடு அரசு பரிந்துரைத்துள்ள நிலையில், அதற்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் நிறுத்தி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அரசு துறைகளுக்கு தேவையான பணியாளர்களை நியமனம் செய்வதில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் முக்கிய பங்காற்றி வருகிறது. ஆனால், டிஎன்பிஎஸ்சிக்கு நிரந்தர தலைவர் மற்றும் போதிய உறுப்பினர்கள் இல்லை என்று கூறப்படுகிறது. இந்த அமைப்பில் தலைவர் மற்றும் 13 உறுப்பினர்கள் பணியாற்ற வேண்டும். […]

You May Like